Neeraj Chopra Diet: கட்டுடல் மன்னன் நீரஜ் சோப்ரா.. விரும்பி சாப்பிடும் உணவுகள் என்ன? லிஸ்ட் உள்ளே
பாரீஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா விரும்பி சாப்பிடும் உணவுகள் என்ன தெரியுமா?

பாரீஸ் ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்ற நீரஜ் சோப்ரா வெள்ளி வென்றார். போட்டியின் போது நீரஜ் சோப்ராவின் பிட்டான உடலை பார்த்து ரசிகர்கள் இவர் சைவப்பிரியரா அல்லது அசைவைப்பிரியரா என்ற கேள்வியை எழுப்பினார்கள். இந்நிலையில் அவர் எந்த மாதிரியான உணவுப்பழக்கத்தை பாலோ செய்கிறார் என்பது தொடர்பான தகவல்களை இங்கே பார்ப்போம்;
நீரஜ் சோப்ரா காலை உணவு:
நீரஜ் சோப்ரா காலை வேளையில் விரும்பிச் சாப்பிடும் உணவு தொடர்பாக அவரே பேசியிருக்கிறார். அதில், "உணவைப் பொறுத்தவரை, பழங்கள் மற்றும் சாலடுகள் போன்ற இயற்கை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது மிக முக்கியமானது" என்று கூறியிருக்கிறார்.
"தனிப்பட்ட முறையில் காலையில் பயிற்சிகள் மேற்கொள்வதற்கு முன் நான் உணவு எடுத்துக்கொள்வேன். அதில், பழங்கள், தயிர், ஓட்ஸ், மூன்று-நான்கு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் இரண்டு ரொட்டி துண்டுகள் நிச்சயம் இருக்கும் கூடுதலாக, பழச்சாறு, இள நீர்மற்றும் உலர்ந்த பழங்கள் ஆகியவற்றையும் எடுத்துக் கொள்வேன்" என்று கூறியிருக்கிறார்.
நீரஜ் சோப்ரா மதிய உணவு:
மதிய உணவின் போது, தயிர் மற்றும் சாதம் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. அவர் பருப்பு வகைகள், காய்கறிகள், வறுக்கப்பட்ட சிக்கன் மற்றும் சாலட் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறார். பயிற்சி மற்றும் ஜிம்மிற்கு செல்வதற்கு முன், நட்ஸ், பாதாம் அல்லது வாழைப்பழம் போன்றவற்றை விரும்பிச் சாப்பிடுவாராம்.
நீரஜ் சோப்ரா இரவு உணவு:
"இரவு உணவிற்கு, நான் கார்போஹைட்ரேட்டுகளைத் தவிர்க்கிறேன், காய்கறிகள், சாலடுகள் மற்றும் புரதச்சத்து உள்ள உண்பேன். தூங்கும் முன், பால், பேரீச்சம்பழம் மற்றும் சில நேரங்களில் வெல்லம் சாப்பிடுவேன்" என்று நீரஜ் சோப்ராவே கூறியிருக்கிறார். அதன்படி இவர் சைவம் மற்றும் அசைவம் இரண்டையும் விரும்பிச் சாப்பிடுபவர் என்பது தெரிகிறது.
சாப்பாடு | உணவு |
---|---|
காலை உணவு | பழங்கள், தயிர், ஓட்ஸ், மூன்று-நான்கு முட்டையின் வெள்ளைக்கரு, ஆம்லெட், இரண்டு ரொட்டித் துண்டுகள், ஜூஸ் அல்லது உலர் பழங்கள் |
மதிய உணவு | தயிர் மற்றும் சாதம், பருப்பு வகைகள், காய்கறிகள், வறுக்கப்பட்ட கோழி, சாலட் |
சிற்றுண்டி | உலர்ந்த பழங்கள், வாழைப்பழங்கள், சாறு அல்லது இளநீர் |
இரவு உணவு | சூப், வேகவைத்த காய்கறிகள், சாலடுகள், பழங்கள், புரதம் நிறைந்த உணவுகள் |
சிற்றுண்டி | பால், பேரிச்சம்பழம் மற்றும் சில நேரங்களில் வெல்லம் |
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

