PV Sindhu Wins Bronze Medal: சாதனை படைத்த பிவி சிந்து... ட்விட்டரில் குவியும் வாழ்த்துகள்!
சிந்துவின் வெற்றியை அடுத்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துமழை குவிந்து வருகின்றது.
டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஒற்றையர் பேட்மிண்டன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் பி.வி.சிந்து உலக தரவரிசையில் 9ஆம் இடத்தில் உள்ள சீன வீராங்கனை ஹீ பிங் ஜியோவை எதிர்த்து விளையாடினார். இவர்கள் இருவரும் சர்வதேச போட்டிகளில் இதுவரை 15 முறை மோதியுள்ளனர். அதில் ஹீ பிங் 9 முறையும் சிந்து 6 முறையும் வென்றுள்ளனர். ஒலிம்பிக் வெண்கலப்பதக்க போட்டி என்பதால் இரு வீராங்கனைகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி முதல் கேமை பி.வி.சிந்து தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முதல் கேமை 21-13 என்ற கணக்கில் பி.வி.சிந்து வென்று அசத்தினார்.
அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் சிறப்பாக விளையாடிய சிந்து 21-15 என்ற கணக்கில் வென்றார். அத்துடன் இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தையும் வென்று அசத்தினார். ஒலிம்பிக் போட்டிகளில் சிந்துவின் இரண்டவது பதக்கம் இதுவாகும்.
சிந்துவின் வெற்றியை அடுத்து அவருக்கு ட்விட்டரில் வாழ்த்துமழை குவிந்து வருகின்றது.
குடியரசுத் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், 'இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய பெண் என்கிற பெருமையை அடைகிறார் சிந்து. நிலைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புக்கு ஒரு புதிய அளவுகோலை சிந்து உருவாக்கியிருக்கிறார். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்'எனத் தெரிவித்துள்ளார்.
P V Sindhu becomes the first Indian woman to win medals in two Olympic games. She has set a new yardstick of consistency, dedication and excellence. My heartiest congratulations to her for bringing glory to India.
— President of India (@rashtrapatibhvn) August 1, 2021
பிரதமர் மோடி விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் சிந்துவை இந்தியாவின் பெருமை என்றும் நாட்டின் சிறந்த ஒலிம்பியன்களில் ஒருவர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.
We are all elated by the stellar performance by @Pvsindhu1. Congratulations to her on winning the Bronze at @Tokyo2020. She is India’s pride and one of our most outstanding Olympians. #Tokyo2020 pic.twitter.com/O8Ay3JWT7q
— Narendra Modi (@narendramodi) August 1, 2021
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் வாழ்த்துச் செய்தியில் இந்தியாவுக்கு இரண்டு பதக்கங்கள் வாங்கிக்கொடுத்ததற்கு வாழ்த்து கூறியுள்ளார்.
Big congratulations to PV Sindhu for winning the second medal for India. #Tokyo2021 #Bronze
— Rahul Gandhi (@RahulGandhi) August 1, 2021
புதுச்சேரி ஆளுநர் தமிழிசை விடுத்துள்ள வாழ்த்தில் சிந்துவுக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
Many congratulations @Pvsindhu1 on winning the #Bronze . #TokyoOlympics2020 you made Mother India proud today
— Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 1, 2021
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற @Pvsindhu1 அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். pic.twitter.com/3qzmfei6LD
சட்டத்துறை அமைச்சர் கிரென் ரிஜ்ஜு விடுத்துள்ள வாழ்த்தில்..
India strikes 3rd Olympic Medal at #Tokyo2020
— Kiren Rijiju (@KirenRijiju) August 1, 2021
Very proud of you @Pvsindhu1 on winning Bronze, your 2nd Olympic medal and making India proud🇮🇳#Cheer4India pic.twitter.com/XImJ2oJNLb
கிரிக்கேட் வீரர் ஹர்பஜனின் வாழ்த்து செய்தியில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்து தந்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Super happy @Pvsindhu1 thank you for making us proud 🇮🇳 #PVSindhu #proudofyou
— Harbhajan Turbanator (@harbhajan_singh) August 1, 2021
நடிகர்கள் துல்கர் சல்மான், டாப்சி, மஞ்சு வாரியர் மற்றும் அபிஷேக் பச்சன் உள்ளிட்டோரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Our girl is getting home the bronze !!!!!
— taapsee pannu (@taapsee) August 1, 2021
She did it!!!
One colour at a time I say!
Come on champ @Pvsindhu1
This calls for a celebration !!!!!!
You are one of a kind, let’s celebrate YOU!
Congrats @Pvsindhu1 !!! Always making India proud ! #Tokyo2020👏🏻👏🏻🤗🤗 pic.twitter.com/qq7VNgqp3v
— dulquer salmaan (@dulQuer) August 1, 2021
❤️❤️❤️🇮🇳@Pvsindhu1 #Tokyo2020 pic.twitter.com/I0jFdx9SsW
— Manju Warrier (@ManjuWarrier4) August 1, 2021
Congratulations @Pvsindhu1 on winning the bronze🥉 and also for becoming the first Indian woman to win two Olympic medals. You make India proud 🇮🇳 pic.twitter.com/G8rKWbhFOO
— Abhishek Bachchan (@juniorbachchan) August 1, 2021