Tokyo Olympics 2020: ’பிரேக் அப் பண்ணது தப்புதான்!’ - பதக்கம் வென்ற வீரர், வருந்திய எக்ஸ் கேர்ள் பிரெண்ட்..!
நியூசிலாந்து நாட்டு தடகள வீரர் ஹெய்டன் வைல்டுக்கு இதுதான் நடந்துள்ளது. ஹெய்டன் தனிநபருக்கான ட்ரயத்லான் போட்டிகளில் வெங்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வது சாதாரண சாதனை இல்லை. ஆனால் அதை விடப் பெரிய சாதனை அந்தப் பதக்கத்தைப் பார்த்து பதக்கம் வென்றவருடைய எக்ஸ் கேர்ள் பிரெண்ட் அல்லது பாய் பிரெண்ட் ‘அச்சோ இவங்களை மிஸ் பண்ணிட்டோமே என வருத்தப்படுவது. நியூசிலாந்து நாட்டு தடகள வீரர் ஹெய்டன் வைல்டுக்கு இதுதான் நடந்துள்ளது. ஹெய்டன் தனிநபருக்கான ட்ரயத்லான் போட்டிகளில் வெங்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
அவர் பதக்கம் வென்ற மகிழ்ச்சியுடன் கூடுதல் மகிழ்ச்சியாக வேறொன்றும் நடந்தது. அவருடைய முன்னாள் கேர்ள் பிரெண்ட் தொலைக்காட்சியில் தோன்றி, ‘உன்ன அப்போ ப்ரேக் அப் செஞ்சதுக்கு வருத்தப்படறேன்’ என கேமராவை பார்த்தே கன்ஃபெஷன் செய்ததுதான் அது.
You don’t get any better than this. Pure raw emotion from Hayden Wilde 🥲 pic.twitter.com/GZnJyf9akA
— John Mckenzie (@Johnmck419) July 25, 2021
ஹெய்டன் வெங்கலப் பதக்கம் வென்றதை அடுத்து அவரது சொந்த ஊரான வாகாட்னேவில் ஊர் மக்களிடம் அந்த நாட்டின் பிரபல தொலைக்காட்சி பேட்டி எடுத்தது. அப்போதுதான் ஹெய்டனின் முன்னாள் கேர்ள் பிரேண்ட்டும் மைக் முன்பு தோன்றினார்.
ஹெய்டனுடன் பள்ளிக்காலத்தில் டேட்டிங் செய்திருக்கிறார் அந்தப் பெண். தற்போது தனது வருத்தத்தை மகிழ்ச்சி கலந்த குரலில் நகைச்சுவையாகப் பதிவு செய்துள்ளார் அந்தப் பெண்.
‘நான் ஹெய்டனுடன் ஆரம்பப்பள்ளியில் ஒன்றாகப் படித்தேன். அவர் நல்ல உயரத்தைத் தொட்டுள்ளார். எனக்குப் பெருமையாக உள்ளது’ என அவர் கூறியுள்ளார்.
ஹெய்டனுக்கு வேறு எதுவும் சொல்ல விரும்புகிறீர்களா என தொலைக்காட்சியினர் கேட்டதற்கு அவர்,’உன்னை ப்ரேக் அப் செஞ்சதுக்கு இப்போ வருத்தப்படறேன்’ எனக் கூறியுள்ளார்.இதைக் கேட்டு அந்தப் பெண்ணுடன் வந்த நண்பர்கள் சிரித்துள்ளனர். உடனே அந்தப் பெண் சுதாரித்துக்கொண்டு..’இல்லை!இல்லை!எனக்கு ஹெய்டனை நினைச்சா ரொம்பப் பெருமையா இருக்கு அவ்வளவுதான்!’ எனக் கூறியுள்ளார். ஆனா ஹெய்டனுக்கு ஏற்கெனவே கேர்ள் பிரெண்ட் இருக்கிறார் என்பது கூடுதல் தகவல். பதக்கம் வென்ற ஹெய்டனிடம் உடனடியாக நீங்கள் என்ன செய்ய உள்ளீர்கள் எனக் கேட்டதற்கு, ‘என்னுடைய கேர்ள் பிரெண்ட் தற்போது ஸ்பெயினில் இருக்கிறார் அவருக்கு கால் செய்வேன். விடியற்காலையிலேயே எழுந்து அவர் இந்த ரேஸை முழுமையாகப் பார்த்துக் கொண்டிருந்தார்’ எனக் கூறியுள்ளார்.