Tokyo Olympic 2020: ஆடவர் ஹாக்கி அணி, வினேஷ் போகட், ரவிகுமார் .. நாளைக்கு களம்காணும் ஒலிம்பிக் லிஸ்ட்!
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் 06.08.2021 களமிறங்கும் இந்திய வீரர்கள் யார் யார் தெரியுமா?
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் 13ஆவது நாளான இன்று இந்திய அணிக்கு ஒரே நாளில் இரண்டு பதக்கங்கள் கிடைத்தது. ஒலிம்பிக் வரலாற்றில் ஒரே நாளில் இந்திய இரண்டு பதக்கங்கள் வெல்வது இதுவே முதல் முறையாகும். முதலில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலப் பதக்க போட்டியில் ஜெர்மனி அணியை 5-4 என்ற கணக்கில் வீழ்த்தி வெண்கலப்பதக்கம் வென்றது. அதன்பின்னர் ஆடவர் 57 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் ரவிக்குமார் தாஹியா இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்து வெள்ளிப் பதக்கம் வென்றார். இரண்டு பதக்கங்கள் வென்று இருந்தாலும் மல்யுத்த விளையாட்டில் வினேஷ் போகட் காலிறுதியில் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லாமல் பெரிய ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில் நாளை டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் எந்தெந்த இந்திய வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்?
ஹாக்கி: மகளிர் வெண்கலப் பதக்கம் போட்டி: இந்தியா vs பிரிட்டன் (காலை 7.00 மணி)
மல்யுத்தம்: மகளிர் 50 கிலோ எடைப்பிரிவு: முதல் சுற்று- சீமா பிஸ்லா vs சாரா ஹமாடி(துனிசியா)(காலை 8.10 மணி )
ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவு : முதல்சுற்று- பஜ்ரங் புனியா vs எர்நாசர் (கிர்ஜிஸ்தான்)(காலை 8.50 மணி )
தடகளம்: ஆடவர் 50 கிலோ மீட்டர் நடைப்போட்டி: குர்பிரீத் சிங்(காலை 2.00 மணி)
மகளிர் 20 கிலோ மீட்டர் நடைப்போட்டி: பிரியங்கா கோசாமி, பவானா ஜட் (மதியம் 1.00 மணிக்கு)
ஆடவர் 4*400 மீட்டர் ரிலே- முதல்சுற்று: ஆரோக்கிய ராஜீவ், முகமது அனாஸ்,நிர்மல் டாம், அமோஜ் ஜெக்கப் (மாலை 5.17 மணி)
இந்திய மகளிர் ஹாக்கி அணி நாளை வெண்கலப்பதக்கத்திற்கான போட்டியில் நடப்பு ஒலிம்பிக் சாம்பியன் அணியான பிரிட்டன் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்தப் போட்டி மிகவும் கடினமான ஒன்று. இதில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு ஒலிம்பிக் வரலாற்றில் தங்களுடைய முதல் பதக்கத்தை வெல்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். மல்யுத்தத்தில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பஜ்ரங் புனியா நாளை தன்னுடைய முதல் சுற்று போட்டியில் பங்கேற்கிறார். அதேபோல் மகளிர் பிரிவில் சீமா பிஸ்லாவும் நாளை தன்னுடைய முதல் சுற்றில் பங்கேற்க உள்ளார். தடகளத்தில் நடைப் போட்டிகள் மற்றும் 4*400 மீட்டர் ஆடவர் ரிலே போட்டிகள் நடைபெற உள்ளன.
மேலும் படிக்க: இந்தியா ஆடவர் ஹாக்கியின் வீழ்ச்சியும் எழுச்சியும்! 41 ஆண்டுகளுக்குப் பின் சாதித்தது எப்படி?