மேலும் அறிய

Vinesh Phogat: வினேஷ் போகத்தை பார்த்து அஞ்சிய பயிற்சியாளர்! ஏன் தெரியுமா?

எடை குறைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வினேஷ் போகத் இறந்து விடுவார் என்று அஞ்சியதாக பயிற்சியாளர் வோலர் அகோஸ் கூறியுள்ளார்.

ஏமாற்றம் அடைந்த வினேஷ் போகத்:

கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரீஸ் ஒலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 11 ஆ தேதி முடிவடைந்தது. முன்னதாக இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். அதன்படி இறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனையை எதிர்கொள்ள தயாராக இருந்தார். இதனிடையே பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்தி கூறி வந்த சூழலில் மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி ஒன்று வந்தது.

அதாவது வினேஷ் போகத் தகுதிநீக்கம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மல்யுத்த விதிகளின் படி 50 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்பவர்கள் அந்த எடையை விட கூடுதல் எடையில் இருக்கக் கூடாது. ஆனால் அவர் 100 கிராம் அதிக எடையுடன் இருக்கிறார். இதனால் தான் இந்த தகுதி நீக்கம் என்று ஒலிம்பிக் கமெட்டி அறிவித்தது. அதே நேரம் அமெரிக்கா வீராங்கனை சாராவுக்கு தங்கமும், கியூபா வீராங்கனை லோபஸ் வெள்ளிப் பதக்கமும், சுசாகி வெண்கலமும் வென்றதாக அறிவிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சியில் இருந்த வினேஷ் போகத் சர்வதேச மல்யுத்த போட்டியில் இருந்து ஓய்வு பெருவதாகவும் தன்னால் இன்னும் போராட முடியாது என்றும் கூறினார்.

இறந்து விடுவார் என்று அஞ்சினேன்:

இந்நிலையில் வினேஷ் போகத் விளையாட்டு தீர்ப்பாயத்தில் தனது தகுதிநீக்கத்தை எதிர்த்து வெள்ளிப் பதக்கம் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. இச்சூழலில் எடை குறைப்பில் தீவிர பயிற்சியில் ஈடுபட்ட வினேஷ் போகத் இறந்து விடுவார் என்று அஞ்சியதாக பயிற்சியாளர் வோலர் அகோஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில்,"ஒரு மணி நேரம் இருபது நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தோம், ஆனால் 1.5 கிலோ இன்னும் இருந்தது. நள்ளிரவு முதல் காலை 5:30 வரை வெவ்வேறு விதமான பயிற்சிகளை அவர் தொடர்ந்து செய்தார். இதைப் பார்த்த நான் வினேஷ் போகத் இறந்து விடுவார் என்று அஞ்சினேன்" என்று கூறியுள்ளார். இப்படி தன்னுடைய வெற்றிக்காக தொடர்ந்து போராடிய வினேஷ் போகத்திற்கு பதக்கம் கிடைக்காதது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், எப்போதும் அவர் இந்தியவின் தங்கமங்கையாகவே ஜொலிப்பர் என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?

”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க..  கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்

Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்

Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்

ABP Premium

வீடியோ

Jayam Ravi Kenishaa | ரேடியோ ரூம் TO GOA வீடு..பாடகியுடன் ஜெயம் ரவி.. கதறி அழும் ஆர்த்தி!Atishi Marlena | கெஜ்ரிவாலின் நம்பிக்கை!டெல்லியின் அடுத்த முதல்வர்..யார் அதிஷி?Cuddalore Mayor | Thirumavalavan meets MK Stalin | மிரட்டப்பட்டாரா திருமா? அந்தர் பல்டி பேச்சுகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
தயார் நிலையில் கோப்புகள்; துணை முதல்வராகும் உதயநிதி ஸ்டாலின்- இன்று வெளியாகும் அறிவிப்பு?
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க..  கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
”பாட்டி கதிதான் உங்களுக்கும்” : ராகுல் காந்திக்கு மிரட்டல்! பாதுகாப்பை உறுதி செய்யுங்க.. கொந்தளித்த முதல்வர் ஸ்டாலின்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Mahavishnu Controversy : சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு விவகாரம்: சென்னை முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அதிரடி இடமாற்றம்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Container school: அனுமதி மறுத்த வனத்துறை - கன்டெய்னரை பள்ளியாக மாற்றிய மாவட்ட ஆட்சியர் - தெலங்கானாவில் அசத்தல்
Breaking News LIVE: கிண்டி ரேஸ் கிளப் நிலத்தை உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

கஷ்டப்பட்டு திருடி கை உடைந்ததுதான் மிச்சம் -  திருடர்களை புலம்ப வைத்த போலீஸ் - நடந்தது என்ன?

IND vs BAN: டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு - அதிக சிக்ஸர்கள் விளாசிய இந்திய வீரர்கள் யார்? சேவாக்கை நெருங்கும் ரோஹித் ஷர்மா

TN Weather: தமிழ்நாட்டை சுட்டெரிக்கப்போகுது வெயில்! அடுத்த 5 நாட்கள் இப்படித்தான் இருக்கப்போகுது!

Embed widget