(Source: ECI/ABP News/ABP Majha)
Paris Olympics 2024: வேறமாறி.. ஒலிம்பிக்கிலும் கலக்க வந்த ஸ்கேட்போர்டிங்!ரசிகர்களை உற்சாகப்படுத்துமா?
பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் Skateboarding என்ற போட்டி விளையாடப்பட உள்ளது. இந்த போட்டி தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் நாளை (ஜூலை 26) பிரமாண்டமாக தொடங்க உள்ளது. இதில் 206 நாடுகளில் இருந்து 10,500 க்கும் மேற்பட்ட வீரர்கள் தடம் பதிக்க உள்ளனர். இவர்கள் 329 தங்கபதக்கத்திற்கு மல்லுக்கட்ட இருக்கிறார்கள். இந்த பிரமாண்ட போட்டிக்காக பிரான்ஸ் 83 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. அந்தவகையில் பாரீஸ் நகர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.
அந்தவகையில் பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடரில் Skateboarding என்ற போட்டி விளையாடப்பட உள்ளது. இந்த போட்டி தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
Skateboarding:
பாரீஸ் ஒலிம்பிக்கில் ஸ்கேட்போர்டிங் போட்டியானது டோக்கியோ, பூங்கா மற்றும் தெருக்களில் விளையாடப்படுவதைப் போல் இரண்டு பிரிவுகளை உள்ளடக்கியதாக இருக்கும். பார்க் ஸ்கேட்போர்டிங்கில், விளையாட்டு வீரர்கள் வளைந்து, நெழிந்து செல்வார்கள். தெரு (street) ஸ்கேட்போர்டிங்கில், தடகள வீரர்கள் படிக்கட்டுகள் மற்றும் கைப்பிடிகள் போன்ற தடைகளுடன் சாலை போன்ற பாதைகளில் சறுக்கி தங்களது திறமையை வெளிப்படுத்துவார்கள்.
முன்னதாக கடந்த முறை டோக்கியோவில் ஸ்கேட்போர்டிங்கிற்காக நான்கு விளையாட்டு வீரர்கள் தங்கப் பதக்கங்களை வென்றனர்: ஆஸ்திரேலியாவின் கீகன் பால்மர் (men’s park), ஜப்பானின் யூடோ ஹொரிகோம் (men’s street), ஜப்பானின் சகுரா யோசோசுமி (women’s park) மற்றும் ஜப்பானின் மோமிஜி நிஷியா (women’s street) வென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Paris Olympics 2024: களைகட்டியது பாரீஸ்! நாளை தொடங்குகிறது ஒலிம்பிக் திருவிழா - கோடிக்கணக்கான ரசிகர்கள் உற்சாகம்
மேலும் படிக்க: Paris Olympics 2024 Kayak Cross: கயாக் கிராஸ்..பாரீஸ் ஒலிம்பிக்கில் இப்படி ஒரு போட்டியா! விவரம் உள்ளே!