மேலும் அறிய

Paris Olympics 2024: இந்தியாவிற்கு இன்று தங்கம் உறுதி? உச்சகட்ட எதிர்பார்ப்பில் வினேஷ் போகத், பதக்கப் பட்டியல் நிலவரம்

Paris Olympics 2024 Matches Today, august 7th: பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிர் 50கிலோ மல்யுத்த பிரிவின் இறுதிப் போட்டியில், இந்திய வீராங்கனை வினேஷ் போகத் இன்று களம் காண்கிறார்.

Paris Olympics 2024 Matches Today, august 7th: பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:

பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பல்வேறு நாட்டு வீரர், வீராங்கனைகள் மெய்சிலிர்க்க வைக்கும் திறமையை வெளிப்படுத்தி பதக்க வேட்டைகளை நடத்தி வருகின்றனர். பதக்கப் பட்டியலில் முதல் இடத்தை பிடிப்பதில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே கடும் போட்டி நிலவுகிறது. இதனிடையே, 10 நாட்களுக்கான போட்டிகளின் முடிவில் பதக்கப் பட்டியலில் ஆதிக்கம் செலுத்திய நாடுகளின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் அமெரிக்கா மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.

அதன்படி, 24 தங்கம், 31 வெள்ளி  மற்றும் 31 வெண்கல பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 22 தங்கம் உட்பட 59 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும், 14 தங்கம் உட்பட 35 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளது. இந்தியா மூன்று வெண்கல பதக்கங்களுடன் 63வது இடத்தை பிடித்துள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியல்:

வ.எண் நாடுகள் தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 அமெரிக்கா 24 31 31 86
2 சீனா 22 21 16 59
3 ஆஸ்திரேலியா 14 12 9 35
4 ஃப்ரான்ஸ் 13 16 19 48
5 இங்கிலாந்து 12 15 19 46
6 தென்கொரியா 11 8 7 26
7 ஜப்பான் 11 6 12 29
8 இத்தாலி 9 10 7 26
9 நெதர்லாந்து 8 5 6 19
10 ஜெர்மனி 8 5 4 17

எதிர்பார்ப்பில் வினேஷ் போகத்:

நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி, இந்திய வீராங்கனை வினேஷ் போகத் மல்யுத்த போட்டியில் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இன்று இரவு 9.45 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியிலும் வென்று, வினேஷ் போகத் தங்கப் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது சாத்தியமானால், மல்யுத்த போட்டியில் இந்தியாவிற்காக தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை அவர் பெறுவார்.

இந்திய வீரர், வீராங்கனைகளுக்கான இன்றைய போட்டிகள்:

தடகளம்: மராத்தான் ரேஸ் வாக் கலப்பு ரிலே (சூரஜ் பன்வார், பிரியங்கா கோஸ்வாமி) | காலை 11 மணி முதல்

கோல்ஃப்: பெண்கள் சுற்று 1 (அதிதி அசோக், திக்ஷா தாகர்) | மதியம் 12:30 மணி முதல்

டேபிள் டென்னிஸ்: ஆண்கள் & பெண்கள் அணி காலிறுதி ( இந்தியா - ஜெர்மனி) | மதியம் 1:30 மணி முதல்

தடகளம்: ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் தகுதி (சர்வேஷ் குஷாரே) | மதியம் 1:35 மணி முதல்

தடகளம்: பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டம் சுற்று 1 (ஜோதி யார்ராஜி) | மதியம் 1:45 முதல்

தடகளம்: பெண்களுக்கான ஈட்டி எறிதல் தகுதி (அன்னு ராணி) | மதியம் 1:55 முதல்

மல்யுத்தம்: பெண்களுக்கான 53 கிலோ ரவுண்ட் ஆஃப் 16 (ஆண்டிம் பங்கல்) | மாலை 3 மணி முதல்

மல்யுத்தம்: பெண்களுக்கான 53 கிலோ காலிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | மாலை 4:20 மணி முதல்

மல்யுத்தம்: பெண்களுக்கான 50 கிலோ ஃப்ரீ ஸ்டைல் இறுதிப்போட்டி (வ்னேஷ் போகத் - சாரா) | இரவு 09:45 மணி முதல்

மல்யுத்தம்: பெண்களுக்கான 53 கிலோ அரையிறுதி (தகுதிக்கு உட்பட்டது) | இரவு 10:25 முதல்

தடகளம்: ஆண்களுக்கான டிரிபிள் ஜம்ப் தகுதி (பிரவீன் சித்திரவேல், அப்துல்லா அபூபக்கர்) | இரவு 10:45 முதல்

பளு தூக்குதல்: பெண்கள் 49 கிலோ (மீராபாய் சானு) | இரவு 11 மணி முதல்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!Nayanthara Vs Dhanush : PUBLICITY தேடும் நயன்தாரா!கல்யாண வீடியோவுக்கு PROMOTION!ஊறுகாவா தனுஷ்?Kasthuri Arrest : ஹைதராபாத் to சென்னை..!காவல்நிலையத்தில் கஸ்தூரி சிரித்த முகத்துடன் ஆஜர்Rahul Eating Poha : ’’ஆஹா…என்ன ருசி’’ ரோட்டுக்கடை போஹா!ருசித்து சாப்பிட்ட ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை
"கூட்டத்தை கூட்டுங்க" தேர்தல் பிரச்சாரம் கேன்சல்.. டெல்லி விரைந்த அமித் ஷா!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
Pushpa 2 Trailer: ’புஷ்பா’ங்கிறது பெயர் இல்ல; ப்ராண்ட்! வெளியானது ட்ரெய்லர்- மிரட்டல் லுக்கில் அல்லு அர்ஜூன்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
திட்டமிட்ட சதியா? 10 பச்சிளம் குழந்தைகளின் உயிரை பறித்த விபத்துக்கு காரணம் என்ன? பகீர் ரிப்போர்ட்!
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
உதவிப் பேராசிரியர் பணிக்கான வயது வரம்பை 59 ஆக உயர்த்துக; போட்டித்தேர்வு அறிவிப்பு எப்போது?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
விஜய்க்கு ஸ்கெட்ச் போட்டு தரும் தமிழர்.. தவெகவின் அரசியல் ஆலோசகர் யார்?
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
சளி, இருமல் பிரச்னையா?நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவு!
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
80 சீட்.. துணை முதல்வர் பதவி.. அதிமுகவுடன் டீல் பேசுகிறாரா தவெக விஜய்?
Embed widget