Paris Olympics: பி.வி.சிந்து, லோவ்லினா வரலாறு படைப்பார்களா? ஒலிம்பிக்கில் இன்று இந்தியாவுக்கு என்னென்ன போட்டிகள்?
ஒலிம்பிக்கில் இன்று களமிறங்கும் பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை லோவ்லினா மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் பாரிஸ் நகரத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தியா இந்த தொடரில் இதுவரை 2 வெண்கலப் பதக்கங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இந்தியா மேலும் பதக்கங்களை குவிக்கும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்துள்ளனர்.
இந்த நிலையில், ஒலிம்பிக் தொடரின் 5வது நாள் இந்தியாவிற்கு என்னென்ன போட்டிகள்? என்பதை கீழே விரிவாக காணலாம்.
வில்வித்தை:
மகளிர் எலிமினேஷன் போட்டி:
தீபிகா குமாரி – ரீனா பர்னட்(எஸ்டோனியா) – மாலை 3.56
வெற்றி பெற்றால் – 4.35 மணிக்கு மற்றொரு தகுதிப்போட்டி
ஆண்கள் எலிமினேஷன் போட்டி:
தருண்தீப் ராய் – டாம் ஹால் ( இங்கிலாந்து) – இரவு 9.28
வெற்றி பெற்றால் இரவு 10.07க்கு அடுத்த போட்டி
பேட்மிண்டன்:
மகளிர் ஒற்றையர் பிரிவு:
பி.வி.சிந்து – கிரிஸ்டின் குபா ( எஸ்டோனியா) – மதியம் 12.50
ஆண்கள் ஒற்றையர் பிரிவு:
லக்ஷயா சென் – கிறிஸ்டி ( இந்தோனேஷியா) – மதியம் 1.40
பிரணாய் – டக்பட்லே ( வியட்நாம்) – இரவு 11
குத்துச்சண்டை:
மகளிர் 75 கிலோ:
லோவ்லினா – சன்னிவா ( நார்வே) - மதியம் 3.50
ஆண்கள் 71 கிலோ:
நிஷாந்த் தேவ்- ஜோஸ் ( ஈகுவடார்) – இரவு 12.34
குதிரையேற்றம்:
அனுஷ் அகர்வாலா – மதியம் 1.58
துப்பாக்கிச்சுடுதல்:
50 மீ ரைபிள்:
ஆடவர் பிரிவு:
ஐஸ்வரி பிரதாப் சிங், சுவப்னில் குசலே – மதியம் 12.30
மகளிர் பிரிவு:
ஸ்ரேயாசி சிங் – ராஜேஷ்வரி குமாரி – மதியம் 12.30 மணி
டேபிள் டென்னிஸ்:
மகளிர் ஒற்றையர் பிரிவு:
ஸ்ரீஜா அகுலா – ஜியான் ஜெங் ( சிங்கப்பூர்) – மதியம் 2.30
ஒலிம்பிக் தொடரில் இன்று இந்தியா பங்கேற்கும் போட்டியில் நட்சத்திர வீராங்கனைகளாக பி.வி.சிந்து மற்றும் லோவ்லினா உள்ளனர். பி.வி.சிந்து ஏற்கனவே ஒலிம்பிக்கில் வௌ்ளிப்பதக்கம் வென்றவர். லோவ்லினாவும் ஏற்கனவே பதக்கம் வென்றவர். இதனால், இவர்கள் இருவர் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.