Paris Olympics 2024: ஆகஸ்ட் 10.. இந்தியா விளையாடும் போட்டிகளின் அட்டவணை என்ன?
ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்தியா விளையாட உள்ள போட்டிகள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் தொடர் கடந்த ஜூலை 26 ஆம் தேதி தொடங்கியது. அந்தவகையில் தற்போது இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இந்தியா சார்பில் மொத்தம் 117 வீரர்கள் பங்கேற்றனர். அதே நேரம் மனு பாக்கர், சரப்ஜோத் சிங், ஸ்வப்னில் குசலே, ஹாக்கி இந்தியா மற்றும் நீரஜ் சோப்ரா ஆகியோர் இந்தியாவிற்கு பதக்கம் வென்று கொடுத்துள்ளனர்.
இதில் 31 தங்கப்பதக்கம் 25 வெள்ளிப்பதக்கம் மற்றும் 20 வெண்கலப்பதக்கங்கள் என 76 பதக்கங்களுடன் சீனா முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 30 தங்கபதக்கம் 38 வெள்ளிப்பதக்கம் மற்றும் 35 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 103 பதக்கங்களுடன் அமெரிக்கா இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
ஆஸ்திரேலியா 18 தங்கம், 14 வெள்ளி மற்றும் 14 வெண்கலப் பதக்கம் என்று மொத்தமாக 46 பதக்கங்கள் வென்று பதக்கப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில், ஆகஸ்ட் 10 ஆம் தேதி இந்தியா விளையாட உள்ள போட்டிகள் தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:
இந்தியா விளையாட உள்ள போட்டிகள்:
கோல்ஃப் விளையாட்டு - நேரம் - 12:30 PM - 4வது சுற்று - அதீதி அசோக்,திக்சா தஹார்
மல்யுத்தம் மகளிர் 76 கிலோ எடைப் பிரிவு - நேரம் மதியம் 3 - முதல் சுற்று- ரித்திகா ஹூடா
மல்யுத்தம் மகளிர் 76 கிலோ எடைப் பிரிவு - நேரம் மதியம் 4.20 - தகுதி பெற்றால் காலிறுதி சுற்று- ரித்திகா ஹூடா
மல்யுத்தம் மகளிர் 76 கிலோ எடைப் பிரிவு - நேரம் இரவு 10:25 - தகுத பெற்றால் அரையிறுதி சுற்று - ரித்திகா ஹூடா
போட்டிகள் அனைத்தும் ஸ்போர்ட்ஸ் 18 தமிழ் மற்றும் ஜியோ சினிமா ஆப்பில் இலவசமாக பார்க்கலாம். இந்த இரண்டு போட்டிகளை தவிர இந்தியாவுக்கு வேறு பதக்க வாய்ப்புகள் ஆகஸ்ட் 10 ஆம் தேதி விளையாடும் போட்டிகளில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Paris Olympics 2024: அர்சாத் நதீமும் என்னுடைய மகன் தான்.. நீரஜ் சோப்ராவின் தாயார் உருக்கம்!
மேலும் படிக்க: Paris Olympics 2024: ஸ்ரீஜேஷ் ஓய்வு..ரசிகையாக சோகம்.. மனைவியாக மகிழ்ச்சி! ஸ்ரீஜேஷின் மனைவி அனீஷ்யா