Paris Olympics 2024: அடி தூள்..தங்கத்துடன் வெற்றிக் கணக்கை தொடங்கிய சீனா! பாரீஸ் ஒலிம்பிக்கில் அசத்தல்
பாரீஸ் ஒலிம்பிக் 10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் சீனா தங்கபதக்கத்தை வென்றுள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக் 2024:
பாரீஸ் ஒலிம்பிக் 2024 தொடர் நேற்று (ஜூலை 26) பிரான்ஸில் பிரமாண்டமாக தொடங்கியது. இதில் 206 நாடுகளைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். அந்த வகையில் இந்தியா சார்பில் 117 வீரர்கள் இடம் பெற்று பல்வேறு போட்டிகளில் விளையாடி வருகின்றனர்.
10 மீட்டர் ஏர் ரைபிள் கலப்பு அணி பிரிவில் சீனா தங்கபதக்கத்தை வென்றுள்ளது. அதாவது இந்த ஒலிம்பிக் தொடரில் முதல் தங்கத்தை சீனா வென்று அசத்தி இருக்கிறது.அதன்படி சீன ஜோடியான ஹுவாங் யூடிங் மற்றும் ஷெங் லிஹாவோ கொரிய ஜோடியான கியூம் ஜிஹியோன் மற்றும் பார்க் ஹஜுன் ஜோடியை வீழ்த்தியது.
Meanwhile 1st Gold medal of Paris Olympics has gone to China.
— India_AllSports (@India_AllSports) July 27, 2024
No surprise that they secured the top spot in Mixed 10m Air rifle event (Shooting).
PS: In fact China has secured 2nd Gold too, in Diving! #Paris2024 #Paris2024withIAS pic.twitter.com/3UsAoQmvjy
தங்கம் வென்ற சீனா:
கியூம் மற்றும் பார்க் முதல் சுற்றில் 20.6-20.3 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர், ஹுவாங் மற்றும் ஷாங் அடுத்த மூன்று சுற்றுகளை கைப்பற்றி 6-2 என முன்னிலை பெற்றனர். பின்னர் அடுத்தடுத்த சுற்றுகளில் கொரியா 8-14 என்ற கணக்கில் பின்தங்கியது. போட்டி முடிவில் சீனா வெற்றி பெற்றது.