PV Sindhu wins bronze medal : ''மேலும் பல பதக்கங்களைப் பெற வாழ்த்துகள்'' - சிந்துவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
அவரது வாழ்த்து செய்தியில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றும் அவர் மேலும் பல பதக்கங்களைப் பெறவும் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் பிவி சிந்து வென்றுள்ளார். பல்வேறு தரப்பினர் சிந்துவுக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சிந்துவுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும் என்றும் அவர் மேலும் பல பதக்கங்களைப் பெறவும் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளார்.
Congratulations and felicitations to @Pvsindhu1 for her great performance in winning #Bronze in #Badminton.
— M.K.Stalin (@mkstalin) August 1, 2021
Wishing her to bag more medals in future for the nation.
#Olympics #PVSindhu pic.twitter.com/yqK2w0oSii
இதற்கிடையே, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்றது குறித்து பி.வி.சிந்து பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் வானத்தில் மிதந்து கொண்டிருக்கிறேன். பல வருடங்கள் கடுமையாக உழைத்தேன். நான் நன்றாக விளையாடினேன் என்று நினைக்கிறேன். நான் நிறைய உணர்ச்சிகளை வெளிப்படுத்தினேன். வெண்கலம் வென்றதில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அல்லது இறுதிப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை இழந்தது குறித்து வருத்தப்பட வேண்டுமா?” என்று கூறினார்.
"I'm on cloud nine. Worked hard for so many years. I think I've done really well. I had a lot of emotions going through me - should I be happy that I won bronze or sad that I lost the opportunity to play in the final?" PV Sindhu in a statement after winning bronze medal pic.twitter.com/eCpk5cOVZP
— ANI (@ANI) August 1, 2021
முன்னதாக, சிந்துவின் வெற்றி குறித்து அவரது தந்தை பி.வி.ரமணா நமது ஏபிபிக்கு அளித்த பேட்டியில், “நான் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஊடகங்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நேற்று நான் அவளை மிகவும் ஊக்கப்படுத்தினேன். ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் பெண்மணி அவர் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நேற்றைய போட்டிக்குப் பிறகு அவள் கண்களில் கண்ணீர் வந்தது. ஆனால் அவளுடைய இன்றைய போட்டியில் கவனம் செலுத்தச் சொன்னேன். நான் அவளை ஊக்கப்படுத்தி பேசினேன். ஒட்டுமொத்தமாக அவள் அரங்கத்தில் ஆக்ரோஷமாக இருந்தாள். நான் மீண்டும் மீண்டும் சில ஸ்ட்ரோக்குகளை விளையாடுவதை அவளிடம் சொன்னேன். நாம் அவளை மகிழ்விக்க வேண்டும். அவர் அடுத்த ஒலிம்பிக்கிலும் விளையாடுவார் என்று நான் நம்புகிறேன். அவளிடமிருந்து எந்த சிறப்பு கோரிக்கையும் எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X
மேலும், வெண்கலம் தங்கத்திற்கு சமம் என்றும், நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் எனவும் சிந்துவின் தாயார் கூறினார்.