குளிர்கால ஒலிம்பிக்: இந்தியாவின் ஆரிஃப் கான் 45வது இடம்
45வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் ஆரிஃப் கான் ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்தவர். குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே இந்திய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சீனத் தலைநகர் பீஜிங்கில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இன்று நடைபெற்ற ஜெயண்ட் ஸ்லேலோம் பனிச்சறுக்கு விளையாட்டுப் போட்டியில் இந்தியா சார்பாகக் கலந்துகொண்ட ஆரிஃப் கான் 45வது இடத்தைப் பிடித்தார். இதில் ஸ்விட்சர்லாந்தின் மார்க்கோ ஓடர்மட் தங்கப்பதக்கம் வென்றார். பெண்களுக்கான பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் லாரா குட் பெர்ஹாமி பதக்கம் வென்றார். இதன்மூலம் ஸ்விட்சர்லாந்து மட்டும் இந்தப் போட்டியில் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது. 45வது இடத்தைப் பிடித்த இந்தியாவின் ஆரிஃப் கான் ஜம்மூ காஷ்மீரைச் சேர்ந்தவர். குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்ற ஒரே இந்திய வீரர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Beijing 2022 Winter Olympics: Arif Khan finishes 45th in giant slalom, Marco Odermatt wins gold medal
— ANI Digital (@ani_digital) February 13, 2022
Read @ANI Story | https://t.co/rejqVqkwEj#ArifKhan pic.twitter.com/2Tb9rhXDul
2020-ம் ஆண்டு நடக்க இருந்த ஒலிம்பிக் தொடர் கொரோனா பரவலால் ஒத்திவைக்கப்பட்டு 2021-ம் ஆண்டு நடைபெற்றது. அதை அடுத்து, குளிர்கால ஒலிம்பிக் தொடர் சீனாவின் பெய்ஜிங் நகரில் பிப்ரவரி 4-ம் தேதி தொடங்கியது. இந்த விளையாட்டு தொடர் பிப்ரவரி 20-ம் தேதி வரை நடைபெற உள்ளது. குளிர்கால ஒலிம்பிக் தொடரின் தொடக்க விழாவில் இந்தியா சார்பாக காஷ்மீரைச் சேர்ந்த ஆரிஃப் கான் கொடி ஏந்திச் சென்றார்.
2022 குளிர்கால ஒலிம்பிக் தொடரில், இந்தியாவில் இருந்து பங்கேற்றிருக்கும் ஒரே வீரர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 2006-ம் ஆண்டு நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் 4 இந்தியர்கள் பங்கேற்றிருந்த நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற ஒலிம்பிக்கில் குறைவான ஆட்களே பங்கேற்றுள்ளனர். 2010, 2014-ம் ஆண்டுகளில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடர்களில் 3 பேரும், 2018-ம் ஆண்டு 2 பேரும், இம்முறை ஒருவரும் பங்கேற்றுள்ளனர்.
ஆரிஃப் கானின் ஒலிம்பிக் பயணம்:
31 வயதான காஷ்மீரைச் சேர்ந்த ஆரிஃப் கான், பனிச் சறுக்கு விளையாட்டில் போட்டியிட இருக்கிறார். Slalom மற்றும் Giant Slalom என இரு பிரிவுகளின் கீழ் அவர் போட்டியிட இருக்கிறார். 12 வயதில், தேதிய சாம்பியன்ஷிப் வென்ற அவர், நான்கு முறை சர்வதே சாம்பியன்ஷிப் தொடர்களில் இந்தியா சார்பாக விளையாடி இருக்கிறார். பனிச் சுறுக்கு போட்டிகளில் பங்கேற்க இருக்கும் முதல் இந்தியர் இவர்தான். 2022 குளிர்கால ஒலிம்பிக் தொடரில் பங்கேற்றிருக்கும் ஒரே இந்திய வீரருக்கு பதக்கம் வென்ற முன்னாள் இந்திய வீரர் வீராங்கனைகள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர்.