Asian Para Games: ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி.. பதக்க வேட்டையை தொடரும் இந்தியா..
ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் இந்திய அணி பதக்கங்களை குவித்து வருகிறது.
ஆசிய பாரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் சீனாவில் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. அதன்படி இந்த போட்டிகள் அக்டோபர் 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
கடந்த முறை நடைபெற்ற போட்டிகளில் இந்தியா சார்பில் 13 போட்டிகளில் 190 வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்ட நிலையில், தற்போது நடைபெறும் போட்டியில் இந்தியா சார்பில், 191 வீரர்கள், 112 வீராங்கனைகள் என மொத்தம் 303 பேர் பங்கேற்றுள்ளனர்.
அதேபோல் இந்தியாவில் இருந்து 143 பயிற்சியாளர்களும் சீனா சென்றுள்ளனர்.
இந்த வீரர் மற்றும் வீராங்கனைகள் அங்கு நடைபெறும் 17 விதமான போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
தொடரும் பதக்க வேட்டை:
இதில் முதல் நாள் முடிவில் இந்தியா அணி மொத்தம் 17 பதக்கங்களை வென்றது. இதில் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 5 வெண்கலப்பதக்கங்கள் அடக்கம்.
இரண்டாவது நாள் முடிவில் இந்திய வீரர், வீராங்கனைகள் 9 தங்கம், 12 வெள்ளி மற்றும் 13 வெண்கலம் என மொத்தம் 34 பதக்கங்களை வென்றனர்.
அதேபோல், மூன்றாவது நாள் போட்டிகள் இன்று (அக்டோபர் 25) தொடங்கியது. இன்றைய போட்டியிலும் இந்திய அணி பதக்கங்களை குவித்து வருகிறது.
அதன்படி, 2 மணி முடிவின் படி 11 தங்கம், 12 வெள்ளி மற்றும் 20 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்றிருந்தது. இந்நிலையில், தற்போதும் இந்திய அணி பதக்கங்களை வென்று வருகிறது.
இதில், பாரா பவர்லிஃப்டிங்கில் பெண்களுக்கான 61 கிலோ எடைப் பிரிவில் ஜைனப் கத்தூன் 85 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அதே எடைப் பிரிவில் தடகள வீராங்கனை ராஜ் குமாரி 84 கிலோ எடையைத் தூக்கி வெண்கலம் வென்றார். ஆண்களுக்கான 1500m-T11 இறுதிப் போட்டியில் அங்கூர் தாமா 4:27.70 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்கம் வென்றார்.
ஈட்டி எறிதலில் மூன்று பதக்கம்:
ஆண்களுக்கான F-46 ஈட்டி எறிதலில் போட்டியில் 68.60 மீட்டர் தூரம் எறிந்து இந்திய வீரர் சுந்தர் எஸ் குர்ஜார் தங்கம் வென்றார்.
அதேபோல் மற்றொரு வீரரான ரிங்குஹூடா 67.08 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். அதேபிரிவில், இந்திய வீரர் அஜீத் சிங் யாதவ் 63.52 தூரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இவ்வாறாக F-46 ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
ஆடவருக்கான 1500 மீட்டர் டி13 த்டகள போட்டியில் இரட்டை வெற்றியை இந்தியா பெற்றுள்ளது.
மகனஹள்ளி ஷரத் சங்கரப்பா & பல்வந்த் சிங் ராவத் ஆகியோர் முறையே 4:07.50 & 4:13.60 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை பெற்றனர்.
பெண்களுக்கான 1500m-T11 தடகளப் போட்டியில் ரக்ஷிதா ராஜு 5:21.45 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்க பதக்கத்தை வென்றார். அதேபோல், மற்றொரு இந்திய வீரரான லலிதா கில்லாகா 5:48 நிமிடங்களில் பந்த தூரத்தை கடந்து வெள்ளி பதக்கம் வென்றார்.
இவ்வாறாக இந்தியா இன்றைய போட்டிகளிலும் பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.
மேலும் படிக்க: Asian Para Games 2023: ஆசிய பாரா ஒலிம்பிக் போட்டி... பதக்கங்களை அள்ளிக்குவித்த இந்தியா..!
மேலும் படிக்க: Asian Para Games: பதக்கங்களை குவித்து பட்டையை கிளப்பும் இந்தியர்கள் - ஆசிய பாரா விளையாட்டில் அசத்தல்