Aman Sehrawat: அடி தூள்..ரயில்வேயில் பதவி!அமன் ஷெராவத்திற்கு அடித்த ஜாக்பாட்
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத் வடக்கு ரயில்வேயில் 'சிறப்புப் பணியில் அதிகாரியாக' பதவி உயர்வு பெற்றுள்ளார்.
பாரீஸ் ஒலிம்பிக்:
பாரீஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத் வடக்கு ரயில்வேயில் 'சிறப்புப் பணியில் அதிகாரியாக' பதவி உயர்வு பெற்றுள்ளார். பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் ஆண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்றார். இந்நிலையில் அமன் ஷெராவத் வடக்கு ரயில்வேயில்'சிறப்புப் பணியில் அதிகாரியாக' பதவி உயர்வு பெற்றுள்ளார். வடக்கு ரெயில்வே தலை மையகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற அமன் ஷெராவத்துக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அமன் ஷெராவத்திற்கு ரயில்வேயில் பதவி உயர்வு:
இது தொடர்வாக வடக்கு ரயில்வேயின் முதன்மை தலைமைப் பணியாளர் அதிகாரி ஸ்ரீ சுஜித் குமார் மிஸ்ரா பேசுகையில், "அமன் ஷெராவத் தனது ஒலிம்பிக் பதக்கம் வென்றதற்காக பதவி உயர்வு அளிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி அவருக்கு வடக்கு ரயில்வேயில் சிறப்பு பணி அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கிறார்.
அவரது அர்பணிப்பு மற்றும் முயற்சி அனைத்து இந்தியர்களுக்கும் உத்வேகம் அளிப்பதாக இருக்கும்" என்று கூறியுள்ளார். இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 நிலை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியாவின் ஸ்வப்னில் குசேலேவுக்கு இந்திய ரெயில்வேயின் பயண சீட்டு பரிசோதகரில் இருந்து சிறப்பு பணி அதிகாரியாக பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: IPL 2025: நாயகன் மீண்டும் வரான்.. ஐபிஎல்லில் களமிறங்கும் ஸ்மித்! கம்பேக் தருவாரா?
மேலும் படிக்க: Vinesh Phogat: வினேஷ் போகத்தை பார்த்து அஞ்சிய பயிற்சியாளர்! ஏன் தெரியுமா?