மேலும் அறிய

World Cup 2023 Most Runs: அதிக ரன்கள் அடித்த வீரர்கள்... ரச்சின் முதலிடம்.. முன்னேறுவார்களா கோலி மற்றும் ரோகித்!

உலகக் கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் நியூசிலாந்து வீரர் ரச்சின் ரவீந்திரா இருக்கிறார்.

விறுவிறுப்பாக தொடங்கிய ஐசிசி உலகக் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் ஒவ்வொரு லீக் போட்டிகளும் அனல் பறந்தது என்றே சொல்ல வேண்டும். அந்த வகையில் பந்து வீச்சிலும் , பேட்டிங்கிலும் சில வீரர்கள் எதிரணி வீரர்களை மிரட்டினார்கள்.

இதில், இந்திய அணி, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா,நியூசிலாந்து  ஆகிய அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

முதல் இடம் ரச்சின்:

தற்போதையை நிலவரப்படி அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில், நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா, தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி மூன்றாவது இடத்திலும், ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் நான்காவது இடத்திலும், ரோகித் சர்மா ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.

முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி வீரர் ரச்சின் ரவீந்திரா இதுவரை 9 இன்னிங்ஸில் விளையாடி உள்ளார். இதில் மொத்தம் 565 ரன்களை குவித்துள்ளார்.  அதில், இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு சதம், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு சதம் , பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஒரு சதம் என மொத்தம்  3 சதங்களை விளாசியிருக்கிறார். 

இரண்டாம் இடம் குயின்டன் டி காக்:

இரண்டாம் இடத்தில் இருக்கும் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக்  550 ரன்கள் குவித்திருக்கிறார்.  இதில், இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் முதல் சதத்தை பதிவு செய்தார். அடுத்ததாக நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியிலும் 109 ரன்களை குவித்தார்.  வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய குயின்டன் டி காக் 140 பந்துகளில் 174 ரன்களை குவித்தார்.

அதேபோல், நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 116 பந்துகள் களத்தில் நின்ற இஅவர் 114 ரன்களை குவித்து அசத்தினார்.  இவ்வாறாக இந்த தொடரில் 4 சதங்களை அதிரடியாக விளாசி இந்த பட்டியில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். இன்று நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை கணக்கில் கொள்ளாமல் அவர் இந்த பட்டியில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

மூன்றாவது இடம் விராட் கோலி:

மூன்றாவது இடத்தில் உள்ள இந்திய வீரர் விராட் கோலி 543 ரன்கள் எடுத்துள்ளார். அதன்படி, வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சதம், அதேபோல் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியில் ஒரு சதம் என மொத்தம் இரண்டு சதம் அடித்து இருக்கிறார். இச்சூழலில், நெதர்லாந்து அணியுடன் ஒரு லீக் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

நான்காவது இடம் டேவிட் வார்னர்:

நான்காவது இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 446 ரன்களுடன் இருக்கிறார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 163 ரன்கள் எடுத்து முதல் சதத்தை பதிவு செய்தார். நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 104 ரன்கள் என இரண்டு சதத்தை பூர்த்தி செய்திருக்கிரார்.
இதனிடையே நாளை நடைபெறும் போட்டியில் கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வங்கதேச அணியை எதிர்கொள்ள இருக்கிறது. 

ஐந்தாவது இடம் ரோகித் சர்மா:

ஐந்தாவது இடத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். அதன்படி 8 இன்னிங்ஸ்கள் விளையாடி உள்ள அவர் 442 ரன்கள் எடுத்திருக்கிறார்.  ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 131 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சூழலில், இந்த உலகக் கோப்பை தொடர் முடிவின் போது அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் யார் முதல் இடத்தை பெறுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kovi Chezhiyan Event Issue|மேடையில் பேசிய கோவி.செழியன்போதையில் தள்ளாடிய அதிகாரி விழாவில் சலசலப்பு
KN Nehru | ’’அண்ணே என் காரை ஓட்டுங்க’’ஆசையாய் கேட்ட திமுக நிர்வாகி உடனே நிறைவேற்றிய K.N.நேரு
கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Metro Rail: மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
மதுரை, கோவை மெட்ரோ ரயில்.! NO சொன்னது ஏன்.? காரணங்களை அடுக்கும் மத்திய அரசு
EPS ADMK: நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
நெருங்கும் தேர்தல்.! திடீரென வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்- கெத்து காட்டும் அதிமுக
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
Trump: பாலியல் சர்ச்சை, ரிலீசாகிறது எப்ஸ்டீன் ஃபைல்ஸ்..கலக்கத்தில் அமெரிக்கா, சிக்கும் ட்ரம்ப், மஸ்க், க்ளிண்டன்
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
SC President: குடியரசு தலைவர், ஆளுநர்களுக்கு கெடு விதிக்க முடியுமா? 14 கேள்விகள் - உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: நெருங்கும் புயல் சின்னம், கனமழை எச்சரிக்கை..சென்னை, தமிழக வானிலை அறிக்கை
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Divyabharathi: கோட் படத்தில் ஆபாச பேச்சு, இயக்குனரின் அநாகரீகம்? உதவாத நடிகர் - திவ்யபாரதி குற்றச்சாட்டு
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
Honda Car: பொறுத்தது போதும்.. சர்வதேச மாடலை இறக்கிட வேண்டியது தான் - ஹோண்டாவின் 4 புதிய கார்கள்
EPS Requests to PM: “கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
“கோவை-ராமேஸ்வரத்திற்கு ரயில் விடுங்க“; பிரதமரிடம் இபிஎஸ் வைத்த கோரிக்கைகள் என்னென்ன.?
Embed widget