மேலும் அறிய

Neeraj Chopra : இந்தியாவில் இதுதான் பிரச்சனையே...! "தங்கமகன்" நீரஜ் சோப்ராவையே வேதனைப்பட வைத்தது என்ன தெரியுமா..?

தடகள வீரர் நீரஜ் சோப்ரா இந்திய வீரர்கள் அதிகளவில் சர்வதேச போட்டித் தொடர்களில் பங்கேற்க வேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார்.

கடந்த ஒலிம்பிக் போட்டித்தொடரில் இந்தியாவிற்காக தங்கப்பதக்கம் வென்று அசத்தியவர் நீரஜ் சோப்ரா. சமீபத்தில் ஜூரிச்சில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் பங்கேற்று தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். இந்த நிலையில், நீரஜ் சோப்ரா டைமண்ட் லீக்கில் தங்கப்பதக்கத்தை வென்று அசத்திய பிறகு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,

“ காமன்வெல்த் போட்டியிலும், உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட்டபோதிலும், ஜூரிச்சில் நடைபெற்ற போட்டியில் நான் மட்டுமே பங்கேற்றேன் என்பது அசாதாரணமானது. மற்ற நாடுகளில் இருந்து தடகள வீரர்களின் அணிகள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றதை நான் பார்த்தேன். இந்தியாவும் ஏராளமான வீரர்களை இதுபோன்ற போட்டித்தொடருக்கு அனுப்ப வேண்டும்.

Neeraj Chopra : இந்தியாவில் இதுதான் பிரச்சனையே...!

சர்வதேச போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் தற்போது உள்நாட்டுத் தொடரில் சிறப்பாக பங்கேற்று வருகின்றனர். மத்திய அமைச்சகத்திடமும், ஏ.எப்.ஐ., எஸ்.ஏ.ஐ.யிடமும் அதிக இந்தியர்கள் சர்வதேச விளையாட்டில் பங்கேற்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவேன். இந்தியர்கள் அதிகளவில் தலைசிறந்த தடகள வீரர்கள், உலகத்தரம் வாய்ந்த போட்டியாளர்களுக்கு எதிராக விளையாடினால்தான் ஒலிம்பிக், ஆசிய போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் சிறப்பாக ஆட முடியும்.

காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்திய வீரர்கள் முதல்நிலையை அடைய முடியாவிட்டாலும், சிறப்பாகவே ஆடினார்கள். இந்திய வீரர்களுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க அதிக வாய்ப்புகளை வழங்குமாறு தேசிய அமைப்புக்கு வேண்டுகோள் விடுப்பேன். அவர்கள் வெளிநாட்டில் பயிற்சி பெறுவதற்கும் உதவி செய்ய வேண்டும்.

Neeraj Chopra : இந்தியாவில் இதுதான் பிரச்சனையே...!

இந்தியாவில் தற்போது வசதிகள் வளர்ச்சியடைந்துள்ளது. விரைவில் நம்மிடம் உள்விளையாட்டு அரங்குகள், நவீன பயிற்சிக்கூடங்கள் அமையும். நான் இப்போதுதான் இடுப்பு பகுதி காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளேன். என்னால் இன்னும் ஓரிரு வாரங்களுக்கு பயிற்சி செய்ய இயலாது. நான் அடுத்தாண்டு நடைபெறும் போட்டிகளில்தான் கவனம் செலுத்துகிறேன்.

இந்தியாவில் உள்ள பிரச்சினையே, எப்போதும் தங்கப்பதக்கம் வாங்க வேண்டம் என்று விரும்புகின்றனர். விளையாட்டில் மிகவும் முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம், எப்போதும் தங்கப்பதக்கம் வெல்வது என்பது சாத்தியமல்ல. அதை அவர்கள் ஒருவேளை புரிந்துகொண்டால், ஒரு தடகள வீரருக்கு எவ்வளவு அழுத்தங்கள் உள்ளது என்று தெரிந்துகொள்வார்கள்.  ஒருவர் தோற்கும்போதும் ரசி்கர்கள் ஆதரவு அளிக்க வேண்டியது அவசியம். நல்ல தடகள வீரருக்கு பதக்கம் வெல்வது மட்டும் குறிக்கோள் அல்ல. இதை இந்தியாவில் உள்ள ரசிகர்கள் புரிந்துகொண்டால், ஒரு தடகள வீரர் அதிகளவிலான அழுத்தத்துடன் ஆடும்போது அந்த வீரருக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என்றார்.

இந்தியாவிற்காக ஒலிம்பிக் போட்டியில் தனிநபர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்ற இரண்டாவது நபர் நீரஜ்சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது. முதன்முறையாக அபினவ் பிந்தரா ஒலிம்பிக்கில் இந்தியாவிற்காக தனிநபர் பிரிவில் தங்கம் வென்றிருந்தார்.

மேலும் படிக்க : 36th National Games : "நேஷனல் கேம்ஸ் 2022" தொடரில் என்னென்ன போட்டிகள்..? எங்கெங்கு நடக்கிறது? முழு விவரம் உள்ளே..!

மேலும் படிக்க : World Wrestling Championships 2022 : உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் இன்று தொடக்கம்! பதக்க வேட்டை நடத்துமா இந்தியா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather: 5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
5 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை: ஒரு மாவட்டத்தில் உறையை வைக்கப்போகும் பனி.!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
சீமான்  நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
சீமான் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து புறக்கணிப்பு - அமைச்சர் சேகர்பாபு சொன்ன பதில்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய  அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Senthil Balaji ; போட்றா தம்பி பந்தை! வாலிபால் விளையாடிய அமைச்சர். கை தட்டி வரவேற்ற மாணவர்கள்
Anbumani :
Anbumani : "TNPSC, TRB மூலம் ஆசிரியர், அரசு ஊழியர்கள் தேர்வு; அரசு மூடி மறைப்பது ஏன் ?" அன்புமணி கேள்வி
Embed widget