மேலும் அறிய

Neeraj Chopra Lausanne League: டைமெண்ட் லீக் தொடரில் அசத்திய நீரஜ் சோப்ரா.. பட்டம் வென்ற முதல் இந்தியர்.. இறுதிக்கு தகுதி..!

சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தொடரில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா பட்டம் வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

உலக தடகள களத்தில் இந்தியாவை தொடர்ந்து பெருமைப்படுத்தி வருபவர்களில் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவும் ஒருவர். இவர் நேற்று சுவிட்சர்லாந்தின் லவுசானேவில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தடகள தொடரில் பங்கேற்றார். இதற்கு முன்பாக நீரஜ் சோப்ரா இந்தாண்டு யூஜீனில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தொடரில் பங்கேற்று இருந்தார். அந்தத் தொடரில் இவர் இரண்டாம் இடம்பிடித்தார். 

இந்நிலையில் லவுசானே தொடரில் அவர் சிறப்பாக செயல்பட்டு ஜெர்மனியின் ஸூரிச் நகரில் நடைபெறும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தச் சூழலில் நேற்று  ஈட்டி எறிதலில் தன்னுடைய முதல் வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் வீசி அசத்தினார். அதன்பின்னர் இரண்டாவது வாய்ப்பில் இவர் 85.18 மீட்டர் வீசினார். மூன்றாவது வாய்ப்பில் இவர் ஃபவுல் செய்தார். நான்காவது வாய்ப்பில் 80.04 மீட்டர் தூரம் வீசினார். 

இறுதியில் தன்னுடைய முதல் வாய்ப்பில் வீசிய 89.08 மீட்டர் தூரத்துடன் இவர் முதலிடம் பிடித்தார். அத்துடன் லவுசானே டைமெண்ட் லீக் தொடரின் பட்டத்தையும் வென்றார். இதன்மூலம் டைமெண்ட் லீக் தொடரின் பட்டத்தை வென்ற முதல் இந்திய வீரர் என்ற சாதனையை நீரஜ் சோப்ரா படைத்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் ஸூரிச் நகரில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நடைபெற உள்ள டைமெண்ட் லீக் இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். 

இதற்கு முன்பாக டைமெண்ட் லீக் தொடரில் இந்தியாவின் வட்டு எறிதல் வீரர் விகாஸ் கவுடா முதல் மூன்று இடங்களுக்குள் வந்துள்ளார். இவர் 2012 நியூயார்க் மற்றும் 2014 தோஹா ஆகிய இரண்டிலும் வட்டு எறிதலில் இரண்டாம் இடம் பிடித்திருந்தார். அதன்பின்னர் 2015ஆம் ஆண்டு ஷாங்காய் மற்றும் யூஜீன் நகரில் நடைபெற்ற டைமெண்ட் லீக் தொடர்களில் கவுடா மூன்றாவது இடத்தை பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

காமன்வெல்த் போட்டிகளில் ஒலிம்பிக் சாம்பியன் நீரஜ் சோப்ரா காயம் காரணமாக பங்கேற்கவில்லை. அந்த காயத்திலிருந்து மீண்டு வந்த நீரஜ் சோப்ரா தற்போது முதல் தொடரில் அசத்தியுள்ளார். இந்தப் போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை  சந்தித்த நீரஜ் சோப்ரா, ”இன்னும் என்னுடைய காயம் சரியாக குணமடையவில்லை. அதனால் நான் சற்று கவனமாக இன்றைய போட்டியில் பங்கேற்று இருந்தேன். அதனால் நான் அதிகமாக தூரம் வீச வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவில்லை” எனத் தெரிவித்திருந்தார்.

தலைப்பு செய்திகள்

Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Asia Cup 2027: ஆசிய கோப்பை அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
ஆசிய கோப்பை 2027 அட்டவணை - வங்கதேசத்தில் பவுன்சர் பிட்ச்கள் -இந்தியா பயணிக்குமா?
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
உலக இளைஞர் பிரிட்ஜ் சாம்பியன்ஷிப்பில் இந்திய U31 அணி வெண்கலப் பதக்கம் வென்றது
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!
ஸ்கேட்டிங்கில் பறந்து... வில்வித்தையில் எய்து... புதுச்சேரி சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget