(Source: ECI/ABP News/ABP Majha)
MP Harbhajan Singh: மைதானத்திலிருந்து மக்கள் மன்றம் சென்ற ஹர்பஜன்... உள்ளம் உருகி போட்ட பதிவு!
MP Harbhajan Singh: ராஜ்ய சபா உறுப்பினராக பஞ்சாப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னால் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராளுமன்ற வளாகத்தில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ராஜ்ய சபை உறுப்பினராக பஞ்சாப்பில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னால் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாராளுமன்ற வளாகத்தில் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்து முத்திரை பதித்து ஓய்வு பெற்றவர் ஹர்பஜன் சிங். இவர் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து ஆம் ஆத்மி கட்சியின் ராஜ்ஜிய சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள விளையாட்டு பல்கலைக்கழகத்தின் தலைமைப் பொறுப்பிலும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஹர்பஜன் சிங், கடந்த திங்கட்கிழமை (18/07/2022) ராஜ்ய சபையில் அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்பின் போது, “அரசியலமைப்பு, சட்டத்தின் ஆட்சி மற்றும் சபையின் கண்ணியம் ஆகியவற்றைப் பாதுகாப்பேன், பஞ்சாப் மக்களுக்கும் மற்றும் நாட்டின் மக்களுக்கும் என்னால் முடிந்ததைச் செய்வேன். ஜெய் ஹிந்த் ஜெய் பாரத்” என முழங்கினார். இவருடன் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 25 ராஜ்ய சபை உறுப்பினர்கள் பதவியேற்றனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் ப சிதம்பரம், கபில் சிபல், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பிரபுல் படேல், சஞ்சய் ராவத், பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகள் மிசா பார்தி, ஆகியோரும் அடக்கம். இவருடன்தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமப்பாளர் இளையராஜா ராஜ்ய சபை உறுப்பினராக பதவியேற்கவிருந்தார். பதவியேற்பு நாளான 18ம் தேதி இசையமைபாளர் இளையராஜா பாராளுமன்றம் செல்லவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடரில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் உலகக்கோப்பை நாயகன்களுமான கம்பீர் மற்றும் ஹர்பஜன் சிங் சந்தித்து கொண்ட புகைப்படம் இணையத்தில் ஏற்கனவே வைரலானது. இந்நிலையில் தற்போது, இன்று பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு சென்ற ராஜ்ய சபை உறுப்பினர் ஹர்பஜன் சிங், பாராளுமன்ற வளாகத்தின் வெளியில் இருந்து எடுத்த புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் "at Parliment of India" என்ற கேப்ஷனுடன் பதிவிட்டுள்ளார். பார்ப்பதற்கே மிகவும் ரசிக்கும் படியாக இந்த புகைப்படங்கள் இருக்கின்றன. இந்த புகைப்படம் பற்றி இணையவாசிகள் ”பாராளுமன்ற வளாகத்தில் பஞ்சாப் சிங்கம்” என கமெண்ட் செய்து, ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்