அமைச்சர் உதயநிதி அவசர கவனத்திற்கு: தமிழ்நாடுன்னு சொன்னாலே அடிக்குறாங்க... சத்தீஸ்கரில் கதறும் கராத்தே வீராங்கனை! ஏபிபி நாடுக்கு பிரத்யேகப் பேட்டி..!
”தமிழ்நாடுன்னு சொன்னாலே அடிக்கிறாங்க” என்று தமிழ்நாட்டை சேர்ந்த கராத்தே வீராங்கனை பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
”தமிழ்நாடுன்னு சொன்னாலே அடிக்கிறாங்க” ”தமிழ்நாட்டு வீராங்கனையிடம் ஆபாசமாக பேசுறாங்க” என்று தமிழ்நாட்டை சேர்ந்த கராத்தே வீராங்கனையும் அவரது பயிற்சியாளரும் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அனைத்து இந்திய பல்கலைகழகங்கள் இடையேயான கராத்தே தொடர் நடைப்பெற்றது. இதில் இந்திய அளவில் பல்வேறு கராத்தே போட்டிகளில் பதக்கங்களை வென்று குவித்துள்ள தமிழ்நாட்டை சேர்ந்த வீராங்கனை அபிநயா பங்கேற்றுள்ளார். சிறப்பாக விளையாடி இறுதி போட்டிக்கு செல்லும் அளவில் பாயிண்டுகளை குவித்திருந்த அபிநயாவை, திட்டமிட்டே பாயிண்டுகளை குறைத்து சத்தீஸ்கரை சேர்ந்த மற்றும் வடநாட்டு போட்டி ஏற்பாட்டாளர்கள் சிலர் அபிநயா தோல்வியடைந்ததாக அறிவித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்நிலையில் இதை வீராங்கனை அபிநயா அவருடைய பயிற்சியாளர் ராஜேந்திரன் தட்டி கேட்டபோது, ஆபாசமான வார்த்தைகளை பேசியும், கொலை மிரட்டல் விட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட இந்தியர்கள் தங்களை அசிங்கபடுத்துவதாவும், தனக்கு ஏதேனும் நடந்தால் அதற்கு அவர்கள் தான் பொறுப்பு என்றும் தெரிவித்துள்ள வீராங்கனை அபிநயா, தங்களை தமிழ்நாட்டிற்கு பத்திரமாக மீட்டு அழைத்து வர வேண்டும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும், விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதிக்கும் கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து வாட்ஸ்-அப்பில் நேற்று நடந்ததைப் பற்றி ஆடியோவாக வெளியிட்டுள்ள அபிநயாவின் தந்தை , நடுவர்களின் தவறான முடிவினை தட்டிக்கேட்ட பின்னர் அவருக்கும் கராத்தே வீராங்கனை அபிநயாவுக்கும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அபிநயாவின் தந்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் விளையாட்டுத் துறை அமைச்சரும் தமிழ்நாடு அரசு தான் தங்களை காப்பாற்ற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து நமது ஏ.பி.பி நாடு சார்பில் வீரங்கனை அபிநயாவுக்கும் அவரது தந்தைக்கும் தொடர்பு கொண்டு பேசியதில், தமிழ்நாடு என்பதாலேயே எங்களை சரியான மதிப்பு கொடுக்காமல் நடத்துகின்றனர். மேலும், நடுவர்களின் முறைகேடான நடவடிக்கையை தட்டிக் கேட்டதற்கு, எங்களை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதுடன் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.