முதல்வர் கோப்பை: போட்டியில் வென்ற வீரர்களுக்கு கரூர் மாவட்ட டென்னிஸ் சங்கத்தினர் வாழ்த்து
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்று, பிறகு மண்டல அளவிலும், இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. .
சென்னையில் நடைபெற்ற முதல்வர் கோப்பைக்கான போட்டியில் டென்னிஸில் முதல் மற்றும் 2ம் பரிசுகளை வென்று வந்த வீரர்களுக்கு கரூர் மாவட்ட டென்னிஸ் சங்கத்தினர் வாழ்த்து தெரிவித்தனர்.
முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட அளவில் நடைபெற்று, பிறகு மண்டல அளவிலும், இறுதி போட்டிகள் சென்னையில் நடைபெற்றது. கரூரை சார்ந்த வீரர்கள் டென்னிஸ் போட்டியில் சிறப்பாக விளையாடி ஆண்களுக்கான போட்டியில் கவின் கார்த்திக் இரண்டாம் இடம் பிடித்தார். அவருக்கு பதக்கங்களுடன் 75000 ரூபாய் ரொக்கப் பரிசு கிடைத்துள்ளது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் சிவகுரு மற்றும் கவின் கார்த்திக் விளையாடி இரண்டாம் பரிசை தட்டிச் சென்றனர். அவர்களுக்கு பதக்கங்களுடன் 1,50,000 ரூபாய் ரொக்கம் பரிசுடன் வழங்கப்பட்டுள்ளது.
பெண்கள் இரட்டையர் பிரிவில் சைலேஸ்வரி, சகஸ்தாயினி முதல் பரிசை தட்டிச் சென்றனர். அவர்களுக்கு 2 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும், கோப்பையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பெண்கள் பிரிவில் சைலேஸ்வரி இரண்டாம் பரிசை தட்டிச் சென்றார். அவருக்கு 75000 ரொக்கம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் பரிசுகளை வென்ற அவர்கள் ஊர் திரும்பிய நிலையில் கரூர் மாவட்ட டென்னிஸ் சங்கம் சார்பில் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்
1)சைலேஸ்வரி.
2)கவின் கார்த்திக்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்