மேலும் அறிய

R Praggnanandhaa: அவர் பேசமாட்டார்.. ஆட்டம் தான் பேசும்- சென்னையின் பிரக்ஞானந்தா உலகை வியக்க வைத்த கதை !

சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை தோற்கடித்து அசத்தியுள்ளார்.

ஏர்திங்ஸ் என்ற ஆன்லைன் செஸ் சாம்பியன்ஷிப் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்தியா சார்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 16 வயதான பிரக்ஞானந்தா பங்கேற்றுள்ளார். இவர் 8ஆவது சுற்றில் உலகின் நம்பர் ஒன் செஸ் வீரரான மெக்னஸ் கார்ல்சனை எதிர்த்து விளையாடினார். 

இந்தப் போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய பிரக்ஞானந்தா கருப்பு நிற காய்களில் நன்றாக நகர்த்தல்களை மேற்கொண்டார். டார்ஸ்ச்  வகை கேமை பயன்படுத்திய பிரக்ஞானந்தா வெறும் 19 நகர்த்தலில் உலகின் நம்பர் ஒன் வீரரான மெக்னஸ் கார்ல்செனை வீழ்த்தி அசத்தினார். இதன்மூலம் முதல் முறையாக உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தியுள்ளார். 

இந்நிலையில் செஸ் விளையாட்டில் அசுர வளர்ச்சி பெற்று வரும் பிரக்ஞானந்தா கடந்து வந்த பாதை என்ன?

சென்னையைச் சேர்ந்த சிறுவன் பிரக்ஞானந்தா. இவர் சென்னையின் பாடியில் பிறந்தவர். இவரும் இவருடைய அக்கா வைஷாலியும் சிறு வயதில் அதிகமாக தொலைக்காட்சியை பார்த்து வந்துள்ளனர். அப்போது இவர்களுடைய தந்தை ரமேஷ்பாபு மற்றும் தாய் நாகலட்சுமி எப்படி இவர்களின் கவனத்தை மாற்றுவது என்று நினைத்துள்ளனர். அந்த சமயத்தில் தீவிர செஸ் ரசிகரான ரமேஷ் பாபு தன்னுடைய மகள் வைஷாலியை முதலில் செஸ் பயிற்சிக்கு சேர்த்துள்ளார். 

அக்கா வைஷாலி செஸ் பயிற்சி வகுப்பிற்கு செல்வதை பார்த்த பிரக்ஞானந்தாவிற்கு சிறுவயது முதல் செஸ் விளையாட்டில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதனால் அக்காவிடம் இருந்து நான்கு வயது முதல் செஸ் கற்று கொள்ள தொடங்கினார். 5 வயது முதல் செஸ் போட்டிகளில் பங்கேற்று வந்தார். தன்னுடைய 7 வயதில் இவர் 8 வயதுக்குட்பட்டோருக்கான உலக சாமியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதன்பின்னர் 10 வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதன்மூலம் இளம் வயதில் சர்வதேச செஸ் மாஸ்டர் பட்டத்தை வென்று அசத்தினார். 

R Praggnanandhaa: அவர் பேசமாட்டார்.. ஆட்டம் தான் பேசும்- சென்னையின் பிரக்ஞானந்தா உலகை வியக்க வைத்த கதை !

இதைத் திடர்ந்து  12 வருடம் 10 மாதம் 13 நாட்களில் கிராண்ட்மாஸ்டர் பட்டம் வென்று அசத்தினார். இதன்பின்னர் 2019 ஆண்டு நடைபெற்ற 18 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக யூத் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த 14 வயது பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தினார். அத்துடன் 2019 டிசம்பர் மாதம் செஸ் தரவரிசையில் 2600 புள்ளிகளை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் பிரக்ஞானந்தா படைத்திருந்தார். 

ஒருகட்டத்தில் இவர் மற்றும் இவருடைய அக்கா வைஷாலியின் செஸ் பயிற்சிக்கு பெற்றோர்களால் பணம் செலுத்த முடியாத சூழல் உருவாகியது. அப்போது ஒரு தொழிலதிபர் ஒருவர் அவர்களுக்கு உதவி செய்தார். அதேபோல் பிரக்ஞானந்தாவின் பள்ளி அவருக்கான பள்ளி கட்டணம் மற்றும் வருகை பதிவு ஆகியவற்றை தளர்த்தியது. இதனால் எந்தவித சிக்கலும் இல்லாமல் பிரக்ஞானந்தா தொடர்ந்து செஸ் விளையாட்டில் கவனம் செலத்தி வருகிறார். இவர் எப்போதும் அதிகம் பேசுவதில்லை. அவருக்கு பதிலாக அவருடைய ஆட்டம் தான் அதிகம் பேசும். திநகரிலுள்ள பிரபல செஸ் பயிற்சியாளார் ஆர்.பி.ரமேஷின் மாணவர்களில் இவரும் ஒருவர். தற்போது தன்னுடைய 16 வயதில் உலக சாம்பியன் மெக்ன்ஸ் கார்ல்சனை அசுர வளர்ச்சி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: உலக சாம்பியன் மெக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்திய பிரக்ஞானந்தா !

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மருத்துவமனையில் அனுமதி.. நடந்தது என்ன?
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget