Junior Hockey World Cup: 16 ஆண்டுகளுக்குப் பின் அர்ஜென்டினா சாம்பியன்: இந்தியாவுக்கு 4வது இடம்!
மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ப்ரான்சு அணியை எதிர்கொண்ட இந்திய அணி, 3-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவி இந்திய அணி நான்காவது இடம் பிடித்தது.
ஒடிசாவின் புபனேஷ்வரின் ஜுனியர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் ஜெர்மனி, அர்ஜெண்டீனா அணிகள் மோதின. இதில், 4-2 என்ற கோல் கணக்கில் 6 முறை சாம்பினனான ஜெர்மணி வீழ்த்தி 16 ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை கைப்பற்றி இருக்கிறது அர்ஜெண்டீனா.
முன்னதாக, இந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்தியாவும் ஜெர்மனியும் மோதியிருந்தன. இதில் ஜெர்னி 4-2 என இந்தியாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. நவம்பர் 5-ம் தேதி கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் அர்ஜெண்டீர்னாவை எதிர்கொண்டது ஜெர்மனி. இதில், ஆட்டத்தின் 10, 25, 50வது நிமிடங்களில் ஹாட்-ட்ரிக் கோல் அடித்து அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் லாடோரோ டொமைன். அவரை அடுத்து, 60வது நிமிடத்தில் ஃப்ரான்கோ அகொஸ்தினி அடித்த கோல் மூலம் மொத்தம் 4 கோல்களை அடித்தது அர்ஜெண்டீனா.
ஜெர்மனியைப் பொறுத்தவரை, இந்த தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வந்தது. போட்டியின் 36,40வது நிமிடங்களில் ஜூலியஸ் ஹேனர், மாஸி ஃபண்ட் கோல்கள் அடித்தனர். இதனால், 4-2 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டீனா கோப்பையை தட்டிச் சென்றது.
Congratulations @ArgFieldHockey on winning the FIH Odisha Hockey Men's Junior World Cup Bhubaneswar 2021 trophy 🏆
— Hockey India (@TheHockeyIndia) December 5, 2021
You played wonderfully throughout the tournament 👏#IndiaKaGame #JWC2021 #RisingStars pic.twitter.com/1c5jQIEC00
நான்காவது இடம் பிடித்த இந்தியா:
இறுதிப்போட்டிக்கு முன்பு, மூன்றாவது இடத்துக்கான போட்டியில் இந்தியா மற்றும் ப்ரான்சு அணிகள் மோதின. இதில், 3-1 என்ற கோல் கணக்கில் ப்ரான்சு அணியிடம் தோல்வியைத் தழுவி இந்திய அணி நான்காவது இடம் பிடித்தது.
We go down fighting against France 💔#IndiaKaGame #JWC2021 #RisingStars pic.twitter.com/dIcmkql50N
— Hockey India (@TheHockeyIndia) December 5, 2021
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி முடிவுகள்:
சாம்பியன்: அர்ஜெண்டீனா
இரண்டாம் இடம்: ஜெர்மனி
மூன்றாம் இடம்: ப்ரான்சு
நான்காம் இடம்: இந்தியா
ஐந்தாம் இடம்: நெதர்லாது
ஆறாம் இடம்: பெல்ஜியம்
ஏழாம் இடம்: ஸ்பெயின்
எட்டாம் இடம்: மலேசியா
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்