மேலும் அறிய

JBL Season 2: திருச்சியில் ஜூனியர் பேட்மிண்டன் சீசன் 2 போட்டி - உற்சாகத்தில் இளைஞர்கள்

திருச்சி  ஜமால் முகமது கல்லூரியில்  ஜூனியர் பேட்மிண்டன் சீசன் 2 போட்டி, 5 நாட்கள் நடைபெற உள்ளது.

திருச்சி  ஜமால் முகமது கல்லூரியில்  ஜூனியர் பேட்மிண்டன் போட்டி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வை குறித்து EVI ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குனர் பிரேமானந்த் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “VOOKI வழங்கும் ஜேபிஎல்- தமிழ்நாடு ஜூனியர் பேட்மிண்டன் வீரர்களுக்கு ஒரு பெரும் வரமாக அமையவிருக்கும். மேலும் வூக்கி வழங்கும் ஜூனியர் பேட்மிண்டன் லீக், முதல் பேட்மிண்டன் லீக் தமிழ்நாடு அளவில் ஜூனியர் வீரர்களுக்கான பிரத்யேக தளமாகும். குறிப்பாக ஜூனியர் பேட்மிண்டன் லீக், விளையாட்டை பிரபலப்படுத்துவதற்காக யூரோ ஸ்போர்ட்ஸ் டிவி ஒளிபரப்புகிறது. மேலும் ஜியோ சினிமாவில் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்புகிறது.  தமிழ்நாடு மாநிலம் முழுவதும் 19 வயது வரை ஜூனியர்களுக்கான களமாக இந்த லீக் அமைந்திருக்கும். இந்த போட்டிகாக அனைத்து வீரர்களும் நவம்பர் 2022 இல் துபாயில் ஏலம் விடப்பட்டனர்.  மேலும் JBL-சீசன் 2 இப்போது 88 வீரர்களுடன் பெரியதாகவும் சிறப்பாகவும் உள்ளது, 8 Franchisee அணிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. ரெயின்போ ராக்கர்ஸ் , திருச்சி தமிழ் வீரர்கள்,  திருவாரூர் டெல்டா கிங்ஸ் , விருதை வெங்கைஸ், கோவை சூப்பர் கிங்ஸ், சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், தஞ்சை தலைவாஸ், மதுரை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கலந்துகொள்கிறது. 


JBL Season 2: திருச்சியில் ஜூனியர் பேட்மிண்டன் சீசன் 2 போட்டி - உற்சாகத்தில் இளைஞர்கள்

மேலும், JBL - சீசன் 2  போட்டி திருச்சி ஜமால் முகமது கல்லூரி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. லீக்கின் தொடக்க விழா  12 ஆம் தேதி மாலை 4.45 மணிக்கு டாக்டர். ஆர். அன்புமணி ராமதாஸ் முன்னிலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில்  இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் துணைத் தலைவர் மற்றும் தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் தலைவர் வி. அருணாசலம் உறுப்பினர், செயற்குழு BAI & தமிழ்நாடு பூப்பந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் கலந்துகொள்ள உள்ளனர். மேலும்  13, 14,15 வரை போட்டிகள் நடைபெறும்” என்றார்.  குறிப்பாக JBL இன் பிராண்ட் அம்பாசிடர் ஸ்ரீ.ஜி.வி.பிரகாஷ் (நடிகர் மற்றும் இசையமைப்பாளர்) நிகழ்வின் இறுதி நாள் அன்று பங்கேற்கிறார். இந்த தளம் ஜூனியர் வீரர்களுக்கு மன உறுதியை உருவாக்கி தேசிய அளவிலான போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளியை வெல்வதற்கு அவர்களை ஊக்குவிக்கும் என தெரிவித்தார். மேலும் வெற்றி பெரும் அணிக்கு பரிசுதொகையாக 70 லட்சம் வழங்கப்பட உள்ளது. 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
45 வகையான போட்டிகள்... ரூ.1 லட்சம் வரை பரிசு; வரும் 31-க்குள் விண்ணப்பிக்க மறந்து விடாதீங்க!!!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
ரூ. 1 லட்சம் வரை ரொக்கப் பரிசு! நாகை மாவட்ட விளையாட்டு வீரர்களுக்கு அரிய வாய்ப்பு!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
விளையாட்டில் ஆர்வமா? அரசு வழங்கும் ரூ. 1 லட்சம் பரிசு! ஆகஸ்ட் 31-க்குள் உடனே அப்ளை பண்ணுங்க!
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !
சிவகங்கை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வெல்லுங்கள்... முழு விவரம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget