(Source: ECI/ABP News/ABP Majha)
தோல்விக்கு காரணமான வார்னர் த்ரோ… அதிர்ந்து போன கங்குலி, பாண்டிங்! 'ஏன் அப்படி வீசினேன்?' விளக்கும் வார்னர்!
டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கிரிக்கெட் இயக்குனர் சவுரவ் கங்குலி இருவரும் டக் அவுட்டில் இருந்து வார்னரின் இந்த த்ரோவைப் பார்த்து திகைத்துப் போனார்கள்.
சமீபத்திய ஐபிஎல் போட்டிகள் த்ரில்லராக மாறி வருகின்றன. கடைசி பந்தில் ரிசல்ட் கிடைக்கும் போட்டிகள் அதிகரித்துவிட்டன. முக்கியமான அந்த கடைசி பந்தில் நடக்கும் சிறிய ஃபீலடிங் தவறுகள் ஆட்டத்தின் ரிசல்டை மாற்றும் போக்கை பார்க்கமுடிகிறது. ஆர்சிபி - லக்னோ போட்டியில் கடைசி பந்தை பிடிக்கத்தவறி ரன் அவுட்டை மிஸ் செய்த தினேஷ் கார்த்திக் போல, ஒரு மோசமான த்ரோவை கொடுத்து ஆட்டத்தை கைவிட்டார் வார்னர். முக்கியமாக இருவருமே மோஸ்ட் சீனியர் வீரர்கள் என்பது தான் இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். இருவருமே நல்ல ஃபீல்டர்கள் என்று பெயர் பெற்றவர்கள்.
அபிஷேக் போரேலின் பாராட்டத்தக்க கீப்பிங்
குறிப்பாக வார்னர் எறிந்த த்ரோவை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அவ்வளவு உயரமாக வீசியிருந்தார். அந்த த்ரோவை எவ்வளவு சீக்கிரம் ஸ்டம்பில் கொண்டு போய் சேர்க்க முடியுமோ அதைவிட ஒரு மில்லி செகண்ட் முன்னதாக விக்கெட் கீப்பர் அபிஷேக் போரேல் கொண்டு போய் சேர்ந்ததாகத்தான் நம்பவேண்டும், அது அவ்வளவு உண்மை. ஜம்ப் செய்த அவர் கீழே லேண்ட் ஆவதற்கு முன் ஸ்டம்பில் அடித்திருந்தார்.
நார்ட்ஜேவின் அற்புதமான கடைசி ஓவர்
இவ்வளவு களேபரத்தில், ரிஷப் பந்த் இல்லாத நிலையில் இது கண்டிப்பாக பாராட்டப்படவேண்டிய விஷயம். ஆனால் வார்னரின் த்ரோ டெல்லி அணி நிர்வாகத்திற்கு ஜீரணிக்கக் கூடியதாக இல்லை. கடந்த இரண்டு இரவுகளைப் போலவே, கடைசி ஓவரில் டெல்லி மிகவும் அனுபவம் வாய்ந்த அன்ரிச் நார்ட்ஜேவை பந்துவீச்சாளராகக் கொண்டிருந்தது. மிகச்சிறப்பாக, ஒரு நூல் மாறாத யார்க்கர்களால் தாக்குதல் நடத்திய அவர் அவரது முழு உழைப்பையும் அதில் கொடுத்தார்.
— Main Dheet Hoon (@MainDheetHoon69) April 12, 2023
வார்னர் த்ரோவிற்கு காரணம் என்ன?
டெல்லி கேபிடல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் மற்றும் கிரிக்கெட் இயக்குனர் சவுரவ் கங்குலி இருவரும் டக் அவுட்டில் இருந்து இந்த த்ரோவைப் பார்த்து திகைத்துப் போனார்கள். "எங்கள் கண்ட கடைசி மூன்று ஐபிஎல் போட்டிகளைப் பாருங்கள், ஆச்சரியமாக இருந்தன. இன்று அணி வீரர்கள் அருமையாக ஆடினர். ரோஹித் டாப் ஆர்டரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நார்ட்ஜே உலகத் தரம் வாய்ந்தவர், அதைதான் நாங்கள் முஸ்தாபிசரிடம் இருந்தும் எதிர்பார்க்கிறோம். டிம் டேவிட் எதிர் பக்கத்தில் ஓடி வந்துகொண்டிருந்தார், அதனால்தான் பந்தை உயரமாக வீசினேன்," என்று போட்டியின் பின்னர் வார்னர் கூறினார். அதே நேரத்தில் டெல்லி அணியின் தொடர் தோல்விகள் தொடர்ந்தன. 2013 ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக ஆறு தோல்விகளுக்குப் பிறகு தற்போது நான்கு தோல்விகளின் எண்ணிக்கையுடன் உள்ளனர். மும்பையும் இதுவரை வெற்றி பெறாமல் இருந்த நிலையில் டெல்லியை வென்று முதல் வெற்றியை பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.