IPL Records: ”இவங்களுக்கு மட்டுமே சொந்தம்”.. ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நூதன சாதனைகள்
ஐபிஎல் தொடர் வரலாற்றில் படைக்கப்பட்டுள்ள நூதன சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் தொடர் வரலாற்றில் படைக்கப்பட்டுள்ள நூதன சாதனைகள் குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.
விலைமதிப்புமிக்க வீரர் விருதை வென்ற இந்தியர்கள்
15 முறை நடைபெற்றுள்ள ஐபிஎல் தொடர் வரலாற்றில் மூன்று இந்திய வீரர்கள் மட்டுமே, அதிக விலைமதிப்புமிக்க வீரர்கள் விருதை பெற்றுள்ளனர். அதன்படி, கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் சச்சின் 2010ம் ஆண்டும், ரன் மெஷின் என அழைக்கப்படும் கோலி 2016ம் ஆண்டும் அந்த விருதை வென்றனர். அவர்களை தொடர்ந்து 2021ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடிய பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேலும் அதிக விலைமதிப்பு மிக்க வீரர் விருதை வென்றார்.
விலைமதிப்புமிக்க வீரர் விருதை வென்ற வீரர்கள்:
ஐபிஎல் வரலாற்றில் 3 வீரர்கள் மட்டுமே அதிக விலைமதிப்புமிக்க வீரர்கள் எனும் விருதை 3 முறை வென்றுள்ளனர். அதன்படி, சுனில் நரைன் (2012, 2018), ஷேன் வாட்சன் (2008, 2013) மற்றும் ஆண்ட்ரே ரஸல் (2015, 2019) ஆகியோர் தலா இரண்டு முறை அதிக விலைமதிப்புமிக்க வீரர்கள் விருதை பெற்றுள்ளனர்.
ஒரு போட்டியில் அதிக ரன் விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர்
ஒரு போட்டியில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை இந்திய பந்துவீச்சாளர் பசில் தம்பி படைத்துள்ளார். பெங்களூரு அணிக்காக 2018ம் ஆண்டு விளையாடிய போது, பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பசில் தம்பி 70 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
ஜாகிர் கானின் அசத்தல் சாதனை:
இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் முதல் ஐபிஎல் போட்டி மற்றும் 500வது ஐபிஎல் போட்டி ஆகிய இரண்டிலும் இடம்பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் ஆவார்.
அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்:
ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்களின் பட்டியலில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி 234 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.
கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்:
கேப்டனாக ஐபிஎல் தொடரில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் எனும் பெருமையையும், சென்னை அணியின் கேப்டன் தோனி பெற்றுள்ளார். இதுவரை ஐபிஎல் தொடரில் அவர் 210 போட்டிகளில் கேப்டனாக விளையாடியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்சுகள்
ஐபிஎல் தொடரில் 205 போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா, 109 கேட்ச்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக கேட்ச்களை பிடித்த வீரர் எனும் பெருமையை பெற்றுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக ஹாட்ரிக்குகள்
இந்தியாவை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா, ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்சமாக 3 மூறை (டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் XI பஞ்சாப் & புனே வாரியர்ஸ் இந்தியா) ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றிகள்
ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் வென்ற அணி என்ற பெருமையை, 129 வெற்றிகளுடன் மும்பை அணி பெற்றுள்ளது.
அதிக தோல்விகளை பெற்ற அணி:
ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் தோல்வி பெற்ற அணி என்ற மோசமான சாதனையை, 118 தோல்விகளுடன் மும்பை அணி பெற்றுள்ளது.
அதிக முறை டக்-அவுட் ஆன வீரர்கள்:
ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன வீரர்களின் பட்டியலில், மந்தீப் சிங் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் தலா 14 டக்-அவுட்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.
மிக விரைவான டெலிவெரி:
157.7 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசி, அதிவேகமான பந்துவீச்சாளர் எனும் பெருமையை ஷான் டெய்ட் பெற்றுள்ளார்.
அதிவேகமான சதம்
வெறும் 30 பந்துகளில் சதம் விளாசி, ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் எனும் சாதனையை கிறிஸ்கெயில் படைத்துள்ளார்.