IPL KKR vs LSG :விறுவிறுப்பான ஆட்டத்தில் லக்னோ வெற்றி..! ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி...!
IPL KKR vs LSG : ஐ.பி.எல். போட்டியில் லக்னோ - குஜராத் அணிகள் மோதும் போட்டியின் ஸ்கோர் நிலவரங்களை கீழே உடனுக்குடன் காணலாம்.

Background
ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் லக்னோ அணி தனது ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும். அதேசமயத்தில் ப்ளே ஆப் ரேசில் நீடிக்க கொல்கத்தா அணியும் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்குகிறது. ஏற்கனவே குஜராத் அணி ப்ளே ஆப் வாய்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் அடுத்த மூன்று இடங்களுக்கு மற்ற அணிகள் மல்லுகட்டி வருகின்றனர்.
இந்த போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ அணியும், ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா அணியும் முழு மூச்சில் போராடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
விறுவிறுப்பான ஆட்டத்தில் லக்னோ வெற்றி..! ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி...!
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற ஆட்டத்தில் 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று லக்னோ ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
6 பந்தில் 21 ரன்கள்...! வெல்லப்போவது யார்..?
கடைசி கட்டத்தில் விறுவிறுப்பை ஏற்றும் விதமாக ரிங்கு சிங்கும், சுனில் நரைனும் சிக்ஸர்களாக விளாசியதால் கொல்கத்தா வெற்றிக்கு கடைசி 6 பந்தில் 21 ரன்கள் தேவைப்படுகிறது.




















