SRH vs MI Score LIVE : 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை
IPL 2021 SRH vs MI Score LIVE : ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் அபுதாபியில் நடைபெறும் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும் நேருக்கு நேர் மோத உள்ளன.
LIVE
Background
அபுதாபியில் நடைபெறும் முக்கியமான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ஹைதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மும்பை
மும்பை அணி நிர்ணயித்த 236 ரன்கள் என்ற இலக்குடன் ஆடிய ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் மும்பை அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
36 பந்தில் 94 ரன்கள் தேவை- ஹைதராபாத் என்ன செய்யப்போகிறது?
ஹைதராபாத் அணியின் வெற்றிக்கு 36 பந்தில் 94 ரன்கள் தேவைப்படுகிறது. மணீஷ் பாண்டே 35 ரன்களுடனும், பிரியம் கார்க் 27 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
13 ஓவர்களில் 138 ரன்களை குவித்த ஹைதராபாத்
மும்பை அணி நிர்ணயித்த 236 ரன்கள் இலக்கை நோக்கி ஆடி வரும் ஹைதராபாத் அணி 13 ஓவர்களில் 138 ரன்களை குவித்துள்ளது.
ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை தவறவிட்ட மும்பை - ஹைதராபாத்தால் வாழ்க்கை பெற்ற கொல்கத்தா
ஹைதராபாத் அணியை 65 ரன்களுக்குள் ஆட்டமிழக்க செய்யாத காரணத்தால் மும்பை அணி ப்ளே ஆப் செல்லும் வாய்ப்பை தவறவிட்டு தொடரில் இருந்து வெளியேறியது. கொல்கத்தா அணி வாய்ப்பு பெற்று நான்காவது அணியாக ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றியது.
9 ஓவர்களில் 100 ரன்களை கடந்த ஹைதராபாத்
மும்பை அணிக்கு எதிராக அதிரடியாக பேட் செய்து வரும் ஹைதராபாத் அணி 9 ஓவரகள் முடிவில் 100 ரன்களை கடந்துள்ளது. ஆனால், அடுத்தடுத்து இரு விக்கெட்டுகளை இழந்து ஹைதராபாத் தடுமாறி வருகிறது.