மேலும் அறிய

SRH Vs LSG, IPL 2024: சென்னை அணிக்கு சிக்கல்? பிளே-ஆஃப் வாய்ப்பிற்காக ஐதராபாத் - லக்னோ இன்று பலப்பரிட்சை

SRH Vs LSG, IPL 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் லக்னோ மற்றும் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

SRH Vs LSG, IPL 2024:  லக்னோ மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோத உள்ள போட்டி, இரவு 7.30 மணிக்கு ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.

ஐபிஎல் தொடர் 2024:

இந்திய கிரிக்கெட் திருவிழாவான ஐபிஎல் தொடரின் 17வது சீசன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 56 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், பிளே-ஆஃப் ரேஸ் வேகமெடுத்துள்ளது. ஆனாலும், இதுவரையிலும் ஒரு அணி கூட அதிகாரப்பூர்வமாக பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறவில்லை. இதன் காரணமாக மீதமுள்ள ஒவ்வொரு போட்டிகளின் முடிவும் 10 அணிகளுக்கும் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அந்த வகையில், இன்றைய லீக் போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத்  மற்றும் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன.

ஐதராபாத் - லக்னோ பலப்பரீட்சை:

தெலங்கானா மாநிலத்தில் உள்ள ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. ஐதராபாத் அணி இதுவரை விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றிகளுடன்,  புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. கடைசியாக விளையாடிய நான்கு லீக் போட்டிகளில்  மூன்று தோல்விகளை பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு மேலும் பிரகாசமாகிவிடும். லக்னோ அணியும் 11 போட்டிகளில் விளையாடி ஆறில் வென்றாலும், மோசமான ரன் ரேட் காரணமாக புள்ளிப்பட்டியலில்  ஆறாவது இடத்தில் உள்ளது. பிளே-ஆஃப் வாய்ப்பை தக்கவைக்க மீதமுள்ள லீக் போட்டிகளில் குறைந்தது இரண்டு போட்டிகளில் வெற்றி பெற வேண்டியது இரு அணிகளுக்கு அவசியம். இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு முன்னேறும், இது சென்னை அணிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது. காரணம் இன்றைய போட்டியில் யார் வெற்றி பெற்றாலும் சென்னை அணி, புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்திற்கு தள்ளப்படும்.  எனவே இந்த போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சமிருக்காது. போட்டியின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

பலம், பலவீனங்கள்:

உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது ஐதராபாத் அணிக்கு முதல் பலமாக பார்க்கப்படுகிறது. தொடரின் முதல் பாகத்தில் அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வந்த அணி, தற்போது பேட்டிங்கில் சொதப்பி வருகிறது. அபிஷேக் சர்மா மற்றும் கிளாசென் ஆகியோர் ஃபார்மை இழந்து காணப்படுகின்றனர். பந்துவீச்சில் ஆரம்பம் முதலே அந்த அணி பலவீனமாக தான் உள்ளது. இமாலய இலக்குகளை நிர்ணயித்தாலும், போராடி தான் அந்த வெற்றிகளை பெற்றது. தற்போது பேட்டிங்கும் மோசமாக இருப்பதால், பந்துவீச்சில் உள்ள குறைபாடுகள் பெரியதாக தெரிய தொடங்கியுள்ளன. லக்னோ அணியி தொடக்க விரர் டி-காக் ரன் சேர்க்க முடியாமல் தடுமாறுவது லக்னோ  அணியின் பலவீனமாக உள்ளது. கே,எல். ராகுல், ஸ்டோய்னிஸ், ஆயுஷ் பதோனி ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். மோஷின் கான், யாஷ் தாக்கூர் மற்றும் மயங்க் யாதவ் ஆகியோர் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். இருப்பினும் கூட்டு முயற்சியை வெளிப்படுத்த அந்த அணி தவறி வருகிறது.

நேருக்கு நேர்:

ஐபிஎல் வரலாற்றில் ஐதராபாத் அணிக்கு எதிராக களம் கண்ட 3 போட்டிகளிலும் லக்னோ அணி வெற்றி பெற்றுள்ளது.  ஐதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி அதிகபட்சமாக 185 ரன்களையும், குறைந்தபட்சமாக 127 ரன்களையும் பதிவு செய்துள்ளது. அதேநேரம், லக்னோ அணிக்கு எதிராக ஒரு போட்டியில் ஐதராபாத் அணி அதிகபட்சமாக 182 ரன்களையும், குறைந்தபட்சமாக 121 ரன்களையும் பதிவு செய்துள்ளது.

ஐதராபாத் மைதானம் எப்படி?

ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானம் பேட்ஸ்மேன்களுக்கான சொர்க்கபுரியாக உள்ளது. இந்த ஆடுகளத்தில் ரன்கள் எளிதாகக் கிடைக்கும். டாஸ் வெல்லும் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து போர்டில் ஒரு பெரிய ஸ்கோரை பதிவு செய்வது வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும். 

உத்தேச அணி விவரங்கள்:

ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அப்துல் சமத், ஷாபாஸ் அகமது, மார்கோ ஜான்சன், பாட் கம்மின்ஸ் , புவனேஷ்வர் குமார், மயங்க் மார்கண்டே, ஜெய்தேவ் உனத்கத்

லக்னோ: KL ராகுல், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆஷ்டன் டர்னர், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்ட்யா, ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொஹ்சின் கான், மயங்க் யாதவ்/கே கவுதம்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Chidambaram issue : முற்றிய தீட்சிதர்கள் வாக்குவாதம்! உடனே OFF செய்த நீதிபதி! OK சொன்ன அறநிலையத்துறைTemple AC Water : அது தீர்த்தம் இல்ல.. AC தண்ணி! உ.பி கோயிலில் அவலம்! ”டேய் பரமா படிடா”Rahul about Priyanka | ”அப்பாவை கொன்றவரைகட்டி அணைத்தவர் பிரியங்கா”கண்கலங்கிய ராகுல் காந்திIND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்து

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கனிமொழிக்கு கடிவாளம்?
கனிமொழிக்கு கடிவாளம்? "உதயநிதியை வந்து பாருங்க" தூத்துக்குடிக்கு பறந்த ORDER
"பெண் காவலர்களுக்கு போதிய வசதி இல்லை" கொதித்தெழுந்த இபிஎஸ்.. நடந்தது என்ன?
"அந்தப்புரத்திற்கு சேவை செய்ய வந்தவர்கள்தான் தெலுங்கர்கள்" நடிகை கஸ்தூரி சர்ச்சை!
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
Breaking News LIVE 4th NOV 2024: யாரேனும் மிரட்டினால்... 1930-ஐ அழையுங்கள்: சென்னை மாநகர போலிஸார் அறிவிப்பு
"ரொட்டியையும் பெண்களையும் களவாடும் வங்கதேச குடியேறிகள்" மீண்டும் சர்ச்சையை கிளப்பிய பிரதமர் மோடி!
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
சென்னை தனியார் பள்ளியில் மீண்டும் வாயுக்கசிவு? மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்- பள்ளி மூடல்
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
US Election 2024: அமெரிக்க தேர்தல், கமலா ஹாரிஸ் Vs டிரம்ப், பெரும்பான்மை கிடைக்காவிட்டால் புதிய அதிபர் யார்?
”I am not Interested -  ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
”I am not Interested - ராஜபக்சேவிற்கு எதிராக கையெழுத்து போட மறுத்த விஜய்” தமிழர் நலனை எப்படி காப்பார்?
Embed widget