Watch Video: கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கிடைத்த புதிய ஜிம் பார்ட்னர்..யாருன்னு நீங்களே பாருங்க!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் நடராஜன் மகள் ஜிம்மிற்கு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
![Watch Video: கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கிடைத்த புதிய ஜிம் பார்ட்னர்..யாருன்னு நீங்களே பாருங்க! SRH Player Natarajan Daughter Joined Her Father For Gym Session IPL 2024 - Watch Video Watch Video: கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு கிடைத்த புதிய ஜிம் பார்ட்னர்..யாருன்னு நீங்களே பாருங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/10/70a66624038d8cbe1750086baa0808201715344587093572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஐ.பி.எல் 2024:
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. இந்த லீக்கில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 16 புள்ளிகளை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், 14 புள்ளிகளை பெற்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மூன்றாவது இடத்திலும் உள்ளது. நான்காவது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இடம்பெற்றுள்ளது. இச்சூழலில் தான் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை பொறுத்தவரை இதுவரை 12 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் 7 போட்டிகளில் வெற்றியையும் 3 போட்டிகளில் தோல்வியையும் அந்த அணி பதிவு செய்துள்ளது. இச்சூழலில் தங்களது 13 வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை மே 16 ஆம் தேதி எதிர்கொள்ள உள்ளது சன்ரைசர்ஸ்.
வைரல் வீடியோ:
இந்நிலையில் அதற்கு தயாராகும் வண்ணம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதிலும் குறிப்பாக ஜிம்மிற்கு சென்று அங்கும் உடற்பயிற்சி செய்து வருகின்றனர். இச்சூழலில் தான் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது. அதாவது ஜிம்மிற்கு நடராஜன் அவரது குழந்தை உடன் சென்றிருக்கிறார்.
View this post on Instagram
புதிய ஜிம் பார்ட்னர்:
அதன்படி நடராஜனின் குழந்தை ஜிம்மில் உடற்பயிற்சி செய்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் நடராஜனிற்கு புதிய ஜிம் பார்டனர் கிடைத்துவிட்டார் என்று கூறிவருகின்றனர். இன்னும் சிலரோ இந்த வீடியோ பார்ப்பதற்கு மிகவும் கியூட் ஆக இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி எப்போது தங்களது வீரர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
— Natarajan (@Natarajan_91) May 10, 2024
முன்னதாக இந்த சீசனில் 10 போட்டிகள் விளையாடி உள்ளார் நடராஜன். இதில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். சில நாட்களுக்கு முன்புவரை ஆரஞ்சு தொப்பி இவர் வசம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: IPL 2024: "உன்கூட பேச மாட்டேன்" ஷஷாங்க் சிங்கிடம் ஜானி பார்ஸ்டோ அப்படி சொன்னது ஏன்?
மேலும் படிக்க: CSK Vs GT, IPL 2024: பிளே-ஆஃப் வாய்ப்பை உறுதிப்படுத்துமா சென்னை? ஷாக் கொடுக்குமா குஜராத்? - இன்று பலப்பரீட்சை
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)