IPL 2024: "உன்கூட பேச மாட்டேன்" ஷஷாங்க் சிங்கிடம் ஜானி பார்ஸ்டோ அப்படி சொன்னது ஏன்?
டக் அவுட்டாகி வெளியேறிய போது சோகமாக அமரந்திருந்த ஷஷாங்க் சிங்கை ஜானி பார்ஸ்டோவ் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தினார்.
கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கியது ஐ.பி.எல் சீசன் 17. விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதல் இடத்தில் இருக்கிறது. அதேநேரம் பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றியும் 7 போட்டிகளில் தோல்வியையும் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிளிப்பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் ஜானி பேர்ஸ்டோவ் குறித்து பேசியுள்ளார் பஞ்சாப் கிங்ஸ் அணியின் மற்றொரு வீரரான ஷாஷாங்க் சிங்.
ஐ.பி.எல் 2024:
அதாவது கடந்த மார்ச் 23 ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர் கொண்டது பஞ்சாப் கிங்ஸ். இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்தார். 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை தொடங்கியது பஞ்சாப் கிங்ஸ்.
டக் அவுட்டான ஷஷாங்க் சிங்:
இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷிகர் தவான் 22 ரன்களிலும், ஜானி பேர்ஸ்டோவ் 3 பந்துகளில் 9 ரன்களும் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். அதேபோல் பிரப்சிம்ரன் சிங் 26 ரன்களிலும் ஆட்டமிழக்க பின்னர் வந்த சாம் கரன் 63 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தார். அப்போது 7 வது இடத்தில் களம் இறங்கினார். இந்த சீசனில் தன்னுடைய முதல் போட்டியில் களம் இறங்கிய ஷஷாங்க் சிங் , கலீல் அகமது பந்தில் டக் அவுட் முறையில் வெளியேறினார்.
Shashank Singh said "I got a duck in our first match of IPL 2024, was dejected and suddenly Jonny Bairstow tapped me from behind and told 'If I don't see you smiling, I will stop speaking with you' - I have kept it in mind ever since". [Amol Karhadkar from Sportstar] pic.twitter.com/vNFqicxVK8
— Johns. (@CricCrazyJohns) May 8, 2024
ஜானி பேர்ஸ்டோவ் சொன்ன அந்த வார்த்தை:
இச்சூழலில் டக் அவுட் ஆகி வெளியேறிய போது நடந்த சம்பவத்தை பற்றி பேசியுள்ளார் ஷஷாங்க் சிங். இது தொடர்பாக பேசிய அவர், “டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது நான் டக் அவுட் ஆகி வெளியேறிவிட்டேன். பின்னர் பெஞ்சில் சோகமாக அமர்ந்திருந்தேன். அப்போது ஜானி பேர்ஸ்டோவ் என் பின்னர் இருந்து என்னை தட்டிக்கொடுத்து, “நீ இப்போது சிரிக்கவில்லை என்றால் நான் உன்னுடன் பேசுவதை நிறுத்திவிடுவேன்”என்று சொன்னார்.
பின்னர் நான் சிரித்தவிட்டேன். அதை பார்த்த ஜானி ஓகே உன்னுடன் பேசிகிறேன் என்று சொன்னார். அப்போதில் இருந்து என் மனதை மாற்றிக்கொண்டேன்“என ஷஷாங்க் சிங் கூறியுள்ளார். இந்த சீசனைப் பொறுத்தவரை பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனையை ஷஷாங்க் சிங் தன்வசம் வைத்துள்ளார். மொத்தம் 11 போட்டிகள் விளையாடி உள்ள அவர் 63 என்ற சராசரியுடன் 165.78 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 315 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 28 பந்துகளில் 68 ரன்களை விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.