RR vs PBKS IPL 2023: பஞ்சாப்பை பந்தாடுமா ராஜஸ்தான்..? ரெக்கார்ட்ஸ் சொல்வது என்ன..? ஃபுல் லிஸ்ட்!
இரு அணிகளின் தற்போதைய பேட்ஸ்மேன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார்.
இந்தியன் பிரிமீயர் லீக் தொடரின் 16வது சீசனின் 8வது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு கவுகாத்தியில் மோதுகிறது.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என அனைத்தையும் உள்ளடக்கிய வலிமையான அணியாக திகழ்கிறது. அதேபோல், பஞ்சாப் அணியும் தனது முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக வெற்றிபெற்று முழு நம்பிக்கையுடன் இருக்கிறது. இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் இருப்பதால், இரண்டாவது வெற்றியை பெறும் முனைப்பில் களமிறங்கும்.
ஹெட் டூ ஹெட்:
ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் இதுவரை 24 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் அணி 14 முறையும், பஞ்சாப் அணி 10 லிலும் வெற்றிபெற்றுள்ளது. கடைசியாக இரு அணிகளும் மோதிய போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் 41 பந்துகளில் 68 ரன்கள் எடுத்து யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
அதிகரன்கள் எடுத்த வீரர்:
இரு அணிகளின் தற்போதைய பேட்ஸ்மேன்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் அதிக ரன் எடுத்தவர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அதேபோல்ம் பஞ்சாப் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் அதிக விக்கெட் எடுத்தவர் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
புள்ளி விவரங்கள்:
- இரு அணிகளும் விளையாடிய மொத்த போட்டிகள்: 24
- ராஜஸ்தான் வெற்றி : 14
- பஞ்சாப் வெற்றி : 10
- ராஜஸ்தான் அணிக்காக அதிக ரன்கள்: 552 (சஞ்சு சாம்சன்)
- பஞ்சாப் அணிக்காக அதிக ரன்கள்: 38 (ஜிதேஷ் ஷர்மா)
- ராஜஸ்தான் அணிக்காக அதிக விக்கெட்கள்: 3 (யுஸ்வேந்திர சாஹல்)
- பஞ்சாப் அணிக்காக அதிக விக்கெட்கள்: 12 (அர்ஷ்தீப் சிங்)
- ராஜஸ்தான் அணிக்காக அதிக கேட்சுகள்: 11 (சஞ்சு சாம்சன்)
- பஞ்சாப் அணிக்காக அதிக கேட்சுகள்: 2 (அர்ஷ்தீப் சிங்)
(குறிப்பு : தற்போது அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மட்டுமே புள்ளி விவரங்களில் கணக்கெடுக்கப்பட்டுள்ளது)
ராஜஸ்தான் ராயல்ஸ் முழு அணி:
சஞ்சு சாம்சன் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மியர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், சந்தீப் சர்மா, டிரெண்ட் போல்ட், ஓபேட் மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், ஆர் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், கே.சி. , ஜேசன் ஹோல்டர், டோனோவன் ஃபெரீரா, குணால் ரத்தோர், ஆடம் ஜம்பா, கேஎம் ஆசிப், முருகன் அஷ்வின், ஆகாஷ் வஷிஷ்ட், அப்துல் பிஏ, ஜோ ரூட்.
பஞ்சாப் கிங்ஸ் முழு அணி:
ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக் கான், மேத்யூ ஷார்ட், பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பாவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ், பால்தேஜ் சிங், ககிசோ ரபாடா, ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர் , சாம் குர்ரன், சிகநாதர் ராசா, ஹர்ப்ரீத் பாட்டியா, வித்வத் கவேரப்பா, சிவம் சிங் மற்றும் மோஹித் ராதே.