RR vs MI, IPL 2022 Live: 9-வது முயற்சியில் முதல் வெற்றியை பெற்ற மும்பை-சூர்யகுமார் அபாரம் !
RR vs MI, IPL 2022 Live: மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்..!

Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்புத் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 போட்டிகளில் விளையாடி அனைத்திலும் தோல்வி அடைந்துள்ளது. இதன்காரணமாக இன்றைய போட்டியில் தன்னுடைய முதல் வெற்றியை பதிவு செய்ய மும்பை இந்தியன்ஸ் முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பொறுத்தவரை நடப்புத் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த அணியில் பட்லர் மற்றும் சாஹல் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி வருகின்றனர்.
RR vs MI, IPL 2022 Live: நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் வெற்றியை பெற்ற மும்பை !
இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி தன்னுடைய முதல் வெற்றியை பெற்றுள்ளது.
RR vs MI, IPL 2022 Live: 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை !
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது.



















