RCBvsPBKS Live Score: அடுத்தடுத்து விக்கெட்டுகள்.. அடித்தளம் சரிந்த பெங்களூர்
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் பெங்களூரு அணி தன்னுடைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆகவே இன்றைய போட்டியில் வெற்றிபெற பெங்களூரு அணி தீவிரமாக முயற்சி செய்யும்.
LIVE
Background
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நடப்புத் தொடரில் தற்போது வரை விளையாடியுள்ள 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 4ஆவது இடத்தில் உள்ளது. கடந்த முறை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்று மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது.
இன்றைய போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் பெங்களூரு அணி தன்னுடைய அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்துவிடும். ஆகவே இன்றைய போட்டியில் வெற்றிபெற பெங்களூரு அணி தீவிரமாக முயற்சி செய்யும்.
சொதப்பிய பெங்களூரு... வெற்றி பெற்ற பஞ்சாப் கிங்ஸ்
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் பந்துவீச்சாளர்களைப் பொறுத்தவரை, ரபாடா 3 விக்கெட்டுகளும், ரிஷி தவான், ராகுல் சாஹார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ஹர்ப்ரீத் பர், ஹர்ஷதீப் சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்
காப்பாற்றுவாரா தினேஷ் கார்த்திக்
ஆர்சிபி வெற்றிப்பெற 45 பந்துகளில் 103 ரன்கள் தேவை
RCBvsPBKS Live Score: விரட்டிய பந்து... விழுந்த விராட் விக்கெட்..!
14 பந்துகளில் 20 ரன்கள் எடித்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி, ரபடா வீசிய நான்காவது ஓவரில் ராகுல் ஷகரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.