RCB vs RR, IPL 2023 LIVE: மளமளவென வீழ்ந்த ராஜஸ்தான் விக்கெட்டுகள்: தட்டித்தூக்கிய பெங்களூரு..!
IPL 2023, Match 32, RCB vs RR: பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி குறித்த லைவ அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE

Background
ஐபிஎல் தொடரில் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் நிகழ்ந்த சாதனைகள் மற்றும் முடிவுகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ராஜஸ்தான் - பெங்களூரு மோதல்:
வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்குகிறது.
இதன் நேரலையை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டு ரசிக்கலாம். முன்னதாக இரு அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் நிகழ்ந்த சாதனைகள் மற்றும் முடிவுகளின் விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் தொடரில் இதுவரை 28 முறை இந்த அணிகள் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில், பெங்களூரு அணி 13 போட்டிகளிலும், ராஜஸ்தான் அணி 12 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் முடிவு எடுதும் எட்டப்பவில்லை. குறிப்பாக சின்னசாமி மைதானத்தில் நடந்த இரு அணிகளுக்கு இடையேயான 9 போட்டிகளில் ராஜஸ்தான் 4 முறையும், பெங்களூரு அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளது. சின்னசாமி மைதானத்தில் இதுவரை 90 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூரு அணி 43 போட்டிகளில் வெற்றியையும், 42 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
ஸ்கோர் விவரங்கள்:
ராஜஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 200
பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 217
ராஜஸ்தான் அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 58
பெங்களூரு அணிக்கு எதிராக ராஜஸ்தான் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 70
தனிநபர் சாதனைகள்:(தற்போது அணியில் உள்ள வீரர்களின் அடிப்படையில்)
ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த பெங்களூரு வீரர்: கோலி, 600 ரன்கள்
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் சேர்த்த ராஜஸ்தான் வீரர்: ஜோஸ் பட்லர், 320 ரன்கள்
ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த பெங்களூரு வீரர்: ஹர்ஷல் படேல், 14 விக்கெட்கள்
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த ராஜஸ்தான் வீரர்: அஷ்வின், 4 விக்கெட்டுகள்
ராஜஸ்தான் அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த பெங்களூரு வீரர்: விராட் கோலி, 7 கேட்ச்கள்
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக கேட்ச் பிடித்த ராஜஸ்தான் வீரர்: சஞ்சு சாம்சன், 9 கேட்ச்கள்
நடப்பு தொடரில் இதுவரை:
இன்றைய போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வரும் சூழலில், நடப்பு தொடரில் 4 வெற்றிகளுடன் ராஜஸ்தான் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திலும், 3 வெற்றிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது.
RCB vs RR Live Score: சாம்சன் அவுட்..!
ஹர்சல் பட்டேல் வீசிய பந்தில் அதிரடியாக ஆடி வந்த சஞ்சு சாம்சன் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
RCB vs RR Live Score: 69 ரன்கள் தேவை..!
15 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட்டை இழந்து 121 ரன்கள் சேர்த்துள்ளது. இந்த போட்டியில் வெற்றி பெற 5 ஓவர்களில் 69 ரன்கள் தேவை.
RCB vs RR Live Score: படிக்கல் விக்கெட்..!
சிறப்பாக விளையாடி வந்த படிக்கல் 52 ரன்கள் சேர்த்த நிலையில் வில்லி பந்து வீச்சில் தனது விக்கெட்டை இழந்தார்.
RCB vs RR Live Score: படிக்கல் அரைசதம்..!
களமிறங்கியது முதல் சிறப்பாக விளையாடி வரும் படிக்கல் 30 பந்தில் அரைசதம் எடுத்துள்ளார்.
RCB vs RR Live Score: 10 ஓவர்கள் முடிவில்..!
10 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட்டை இழந்து 92 ரன்கள் எடுத்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

