Virat kolhi: களத்திற்கு வரும்போதே சாதனை பட்டியலில் இணைந்த கிங் கோலி... ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள் !
ஐபிஎல் தொடரில் மூன்றாவது லீக் போட்டியில் பெங்களூரு-பஞ்சாப் அணிகள் மோதி வருகின்றன.
ஐபிஎல் தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் மயாங்க் அகர்வால் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து பெங்களூரு அணிக்கு ராவத் மற்றும் டூபிளசிஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.
டூபிளசிஸ் மற்றும் ராவத் தொடக்கம் முதலே அதிரடி காட்ட தொடங்கினார். இருவரும் மாறி மாறி பவுண்டரிகளை விளாச தொடங்கினர். இதன்காரணமாக முதல் 6 ஓவர்களில் பெங்களூரு அணி விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்தது. அதன்பின்னர் அனுஜ் ராவத் 21 ரன்களில் ராகுல் சாஹர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதைத் தொடர்ந்து பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி களத்திற்கு வந்தார். அவர் களத்திற்கு வரும்போதே ரசிகர்கள் கோலி கோலி.. என்று குரள் எழுப்பி வந்தனர்.
2️⃣0️⃣0️⃣th innings in the #IPL for King Kohli! 🤴🏻 #PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #PBKSvRCB
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 27, 2022
இன்று விராட் கோலி தன்னுடைய 200ஆவது ஐபிஎல் இன்னிங்ஸில் களமிறங்கியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 200 இன்னிங்ஸிற்கு மேல் பேட்டிங் விளையாடிய மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு முன்பாக சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா ஆகிய இருவரும் ஐபிஎல் வரலாற்றில் 200 இன்னிங்ஸிற்கு மேல் பேட்டிங் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் விராட் கோலியின் 200ஆவது இன்னிங்ஸ் தொடர்பாக பலரும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
King kohli erraaa 👑♥️🔥🔥 @imVkohli #RCBvsPBKS pic.twitter.com/wEDrjLHmFO
— ηєнα (@_dreamer__neha) March 27, 2022
The welcome from the fans for King Kohli 💗 pic.twitter.com/4icYaUeSyJ
— Akshat (@AkshatOM10) March 27, 2022
This young cricket fan Skips exam preparation to watch King Virat Kohli play at DY Patil Stadium.
— VINA🖤 (@Viratiangirl18) March 27, 2022
#RCBvPBKS pic.twitter.com/WPv0Vf8iuW
இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்