RCB vs GT, IPL2022 Live: ஆர்சிபி அணியை அசத்தலாக வீழ்த்தி முதலிடம் சென்ற குஜராத்
RCB vs GT, IPL2022 Live: குஜராத் டைட்டன்ஸ், ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதும் போட்டியின் லைவ் அப்டேட்ஸ்!

Background
ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள ப்ராபோர்ன் மைதானத்தில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.
இந்த தொடரில் அறிமுக அணியாக களமிறங்கினாலும் குஜராத் அணி தொடர் தொடங்கியது முதலே பலமிகுந்த அணியாக வலம் வருகிறது. மற்ற அணிகளுடன் ஒப்பிடும்போது குஜராத் அணி மிகுந்த பலமிகுந்த அணியாக வலம் வருகிறது.
பெங்களூர் அணி தொடக்கத்தில் பலமான அணியாக விளையாடினாலும், கடந்த ஓரிரு போட்டிகளில் தோல்வி அடைந்ததால் அந்த அணி மீண்டு வரவேண்டியது அவசியம் ஆகும். பெங்களூர் கேப்டன் பாப் டுப்ளிசிஸ் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது அவசியம்.
RCB vs GT, IPL2022 Live: ஆர்சிபி அணியை குஜராத் 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது
ஆர்சிபி அணியை குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியுள்ளது.
RCB vs GT, IPL2022 Live: 18 ஓவர்களில் குஜராத் 152/4
18 ஓவர்களின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் எடுத்துள்ளது.




















