CSK vs RCB, IPL 2023: ஐபிஎல் தொடரில் சென்னையிடம் மரண அடி.. இன்று திருப்பி கொடுக்குமா பெங்களூரு? சிஎஸ்கேவிடம் வித்தை காட்டுவாரா டுப்ளெசி?
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களுரூரு அணிகளுக்கு இடையே இதுவரை நடந்துள்ள, போட்டிகளின் முடிவுகள் மற்றும் அது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் தொடரில் சென்னை மற்றும் பெங்களுரூரு அணிகளுக்கு இடையே இதுவரை நடந்துள்ள, போட்டிகளின் முடிவுகள் மற்றும் அது தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
சென்னை - பெங்களூரு மோதல்:
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டூப்ளெசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் நேரலையில் கண்டு ரசிக்கலாம். இந்நிலையில் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இரு அணிகளின் மோதல் தொடர்பான விவரங்கள் சுவாரஸ்யமாக உள்ளது.
நேருக்கு நேர்:
ஐபிஎல் தொடரில் இதுவரை சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி அணிகள் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 10 போட்டிகளில் மட்டுமே பெங்களூரு அணி வெற்றி பெற்றுள்ளது. அதேநேரம், சென்னை அணி 19 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டியில் முடிவும் எதுவும் எட்டப்படவில்லை. குறிப்பாக ஏப்ரல் மாதங்களில் இதுவரை 11 முறை இந்த அணிகள் மோதியுள்ள நிலையில், அதில் ஒரு முறை மட்டுமே சென்னை அணியை பெங்களூரு வீழ்த்தியுள்ளது. கடைசியாக விளையாடிய 10 போட்டிகளில் சென்னை அணி 7 போட்டிகளிலும், பெங்களூரு அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரங்கள்:
சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 205
பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் - 215
சென்னை அணிக்கு எதிராக பெங்களூரு அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 70
பெங்களூரு அணிக்கு எதிராக சென்னை அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் - 71
தனிநபர் சாதனைகள்:
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன் அடித்த சென்னை வீரர் - தோனி, 750 ரன்கள்
சென்னை அணிக்கு எதிராக அதிக ரன் அடித்த பெங்களூரு வீரர் - கோலி, 979 ரன்கள்
பெங்களூரு அணிக்கு எதிராக அதிக விக்கெட் எடுத்த சென்னை வீரர் - ஜடேஜா, 18 விக்கெட்
தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர்கள்:
சென்னை: ருதுராஜ், ஜடேஜா, ரகானே
பெங்களூரு: கோலி, மேக்ஸ்வெல், சிராஜ்
சேஸிங்கிற்கான மைதானம்:
பேட்டிங்கிற்கு சாதகமான சின்னசாமி மைதானத்தில் இதுவரை 84 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 34 முறையும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணிகள் 46 முறையும் வெற்றி பெற்றுள்ளன.
இன்றைய சாதனைக்கான வாய்ப்புகள்:
- டி-20 போட்டிகளில் 100 கேட்ச்களை பூர்த்தி செய்ய ரகானேவிற்கு இன்னும் 2 கேட்ச்சுகள் தேவை
- ஐபிஎல் தொடரில் 600 பவுண்டரிகளை பூர்த்தி செய்ய கோலிக்கு இன்னும் 3 பவுண்டரிகளே தேவை
- சென்னை அணிக்கு எதிராக ஐபிஎல் தொடரில் 1000 ரன்களை பூர்த்தி செய்ய கோலிக்கு 21 ரன்கள் தேவை
- ஐபிஎல் தொடரில் 350 பவுண்டரிகளை பூர்த்தி செய்ய தோனிக்கு இன்னும் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே அவசியம்