Watch Video: ”எல்லாரும் சூனாபானா ஆக முடியுமா”.. அஷ்வின் ஐடியா.. ஆர்சிபி-ஐ வெச்சு செய்யும் நெட்டிசன்கள்
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் மான்கட் முறையில் ரன் - அவுட் செய்ய முயன்ற, பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் படேல் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் மான்கட் முறையில் ரன் - அவுட் செய்ய முயன்ற, பெங்களூரு அணி வீரர் ஹர்ஷல் படேல் மீது கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அப்போது நடந்த சம்பவம் தொடர்பான காட்சிகளும் இணையத்தில் வைரலாகியுள்ளன.
பரபரப்பான இறுதிக்கட்டம்:
பெங்களூரு அணிக்கு எதிராக 2013 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி, கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ அணி களமிறங்கியது. தொடக்க வீரர்கள் சொதப்பினாலும் ஸ்டோய்னிஸ் மற்றும் நிகோலஸ் பூரானின் அதிரடி ஆட்டத்தால் லக்னோ அணி த்ரில் வெற்றி பெற்றது. குறிப்பாக, 9 விக்கெட்டுகளை இழந்து இருந்த லக்னோ அணி வெற்றி பெற, கடைசி ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் பந்தை எதிகொள்ள தயாராக இருந்த நிலையில், மறுமுனையில் ரவி பிஷ்னோய் நின்றிருந்தார்.
Let's all laugh at @HarshalPatel23 🤣🤣🤣🤣🤣🤣. Man fumbled a mankad 😭😭😭😭😭. Ee sala cup nam de 🥶 🥶🥶🔥🔥🔥 pic.twitter.com/BAphDkHcRt
— V. (@Messilizer9021) April 10, 2023
விமர்சனத்திற்கு ஆளாகியுள்ள ஹர்ஷ்ல் படேல்:
கடைசி பந்தை வீச ஓடி வந்த பெங்களூரு வீரர் ஹர்ஷல் படேல், திடிரென மன்கட் முறையில் பிஷ்னோயை அவுட் செய்ய முயன்றார். ஆனால், ஓடி வந்த வேகத்தில் ஹர்ஷல் படேல் முதல்முறை வாய்ப்பை தவறவிட்டார். இதற்குள் சுதாரித்துக்கொண்ட பிஷ்னோய் டைவ் அடித்து கிரீசுக்குள் வந்து விக்கெட்டை காப்பாற்றிக்கொண்டார். ஏற்கனவே மன்கட் முறையில் பட்லரை, அஷ்வின் ரன் அவுட் செய்தது கிரிக்கெட் உலகில் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், ஹர்ஷல் படேலின் முயற்சியை பலரும் விமர்சித்து வருகின்றனர். இப்படி விக்கெட் எடுத்து போட்டியை வெல்வதை காட்டிலும் தோல்வியை சந்திப்பதே மேல் எனவும் சாடி வருகின்றனர். அதேநேரம், சரியான நேரத்தில் மன்கட் செய்ய, எல்லாரும் அஷ்வின் ஆகி விட முடியுமா எனவும் மீம்ஸ்களை பகிர்ந்து வருகின்றனர்.
Drama at the Chinnaswamy, a last-ball THRILLER 🤯#IPLonJioCinema #IPL2023 #TATAIPL #RCBvLSG | @LucknowIPL pic.twitter.com/AIpR9Q4gFB
— JioCinema (@JioCinema) April 10, 2023
தினேஷ் கார்த்திக், ஆவேஷ் கான் மீது அட்டாக்:
தொடர்ந்து வீசப்பட்ட கடைசி பந்தை அடிக்காவிட்டாலும், ஆவேஷ் கான் உடனடியாக மறுமுனையை நோக்கி ஓடினார். விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் அந்த பந்தை சரியாக பிடிக்காமல் கோட்டைவிட்டு, ரன் அவுட் வாய்ப்பை மட்டுமின்றி போட்டியை டிரா ஆக்கும் வாய்ப்பையும் நழுவவிட்டார். இதனால் ஆர்சிபி ரசிகர்கள் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதனிடையே, ஒரு பந்தை கூட தொடாமல் பை ரன்னில் ஓடி லக்னோவின் வெற்றியை உறுதி செய்த ஆவேஷ் கான், உற்சாக மிகுதியில் அணிந்திருந்த ஹெல்மெட்டை எல்லாம் கழற்றி தூக்கி வீசி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இதைகண்ட ரசிகர்கள், ஏம்பா ஒரு பாலை கூட தொடல, உனக்கு இந்த கொண்டாட்டம்லா அவசியம் தானா” என கிண்டலடித்து வருகின்றனர்.