(Source: ECI/ABP News/ABP Majha)
Points Table IPL 2023: கலைந்த ஹைதராபாத்தின் பிளே ஆஃப் கனவுகள்.. எந்தெந்த அணிகள் எந்தெந்த இடம்? புள்ளி பட்டியல் விவரம்!
Points Table IPL 2023: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார சதம் அடித்ததன் மூலம் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பின்னுக்கு தள்ளி அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறினார்.
ஐபிஎல் 2023 தொடரின் நேற்றைய 62வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சன்ரைசரஸ் ஹைதராபாத் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி சர்வதேச ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 188 ரன்கள் குவித்தது. குஜராத் அணி சார்பில் சுப்மன் கில் 101 ரன்கள் எடுத்திருந்தார்.
189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 59 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. க்ளாசன் அதிரடியாக அரைசதம் அடித்தபோதிலும் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது இதன்மூலம், குஜராத் டைட்டன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று முதல் அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது.
இந்த போட்டிற்கு பிறகு புள்ளிபட்டியலில் எந்தவித மாற்றமும் இல்லாமல் 10 அணிகளும் அந்தெந்த இடங்களில் அப்படியே உள்ளனர். இந்த வெற்றியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற்றது. அதே நேரத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது. இந்தநிலையில், எந்தெந்த அணி எந்தெந்த இடங்களில் உள்ளது என்ற பட்டியலை கீழே பார்க்கலாம்.
- குஜராத் டைட்டன்ஸ்: 13 போட்டிகள் - 9 வெற்றி
- சென்னை சூப்பர் கிங்ஸ்: 13 போட்டிகள்- 7 வெற்றி
- மும்பை இந்தியன்ஸ்: 12 போட்டிகள் - 7 வெற்றி
- லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: 12 போட்டிகள்- 6 வெற்றி
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: 12 போட்டிகள் - 6 வெற்றி
- ராஜஸ்தான் ராயல்ஸ்: 13 போட்டிகள்- 6 வெற்றி
- கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 13 போட்டிகள் - 6 வெற்றி
- பஞ்சாப் கிங்ஸ்: 12 போட்டிகள் - 6 வெற்றி
- சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: 12 போட்டிகள் - 4 வெற்றி
- டெல்லி கேபிடல்ஸ்: 12 போட்டிகள் - 4 வெற்றி
ஆரஞ்சு கேப்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அபார சதம் அடித்ததன் மூலம் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பின்னுக்கு தள்ளி அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறினார். பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் தரவரிசையில் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். டெவான் கான்வே மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் ஒரு இடம் கீழே இறங்கியுள்ளனர்.
- (ஆர்சிபி) ஃபாஃப் டு பிளெசிஸ் - 631 ரன்கள் (12 போட்டிகள்)
- (ஜிடி) ஷுப்மான் கில் - 576 ரன்கள் (13 போட்டிகள்)
- (ஆர்ஆர்) யஷஸ்வி ஜெய்ஸ்வால் - 575 ரன்கள் (13 போட்டிகள்)
- (சிஎஸ்கே) டெவோன் கான்வே - 498 ரன்கள் (13 போட்டிகள்)
- (எம்ஐ) சூர்யகுமார் யாதவ் - 479 ரன்கள் (12 போட்டிகள்)
பர்பிள் கேப்:
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக ரஷித் கான் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளனர். சாஹல் மூன்றாவது இடத்திலும், பியூஸ் சாவ்லா மற்றும் வருண் சக்கரவர்த்தி அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
- (ஜிடி) முகமது ஷமி - 23 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)
- (ஜிடி) ரஷித் கான் - 23 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)
- (ஆர்ஆர்) யுஸ்வேந்திர சாஹல் - 21 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)
- (எம்ஐ) பியூஷ் சாவ்லா - 19 விக்கெட்டுகள் (12 போட்டிகள்)
- (கேகேஆர்) வருண் சக்கரவர்த்தி - 19 விக்கெட்டுகள் (13 போட்டிகள்)