Rohit Sharma: "மும்பை நஹி.. இந்தியா போலோ" ராஜா ரோகித் சர்மாவிற்கு புகழாரம் சூடிய ஜடேஜா!
Rohit Sharma: ரோகித் சர்மா கடந்த 2013ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு அணியை 5 முறை கோப்பை வெல்ல காரணமாக இருந்தார்.
நடப்பு ஐ.பி.எல். தொடர் கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. மொத்தம் 70 லீக் போட்டிகளுடன் 74 போட்டிகளுக்கு அட்டவணை தயார் செய்யப்பட்டு போட்டிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. நடப்பு ஐபிஎல் தொடரான 17வது ஐ.பி.எல். தொடர் தொடங்குவதற்கு முன்னர் முதல் ஐபிஎல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏறபடுத்திய தகவல் என்றால் அது மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா நீக்கப்பட்டு, ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
மும்பை ராஜா ரோகித் சர்மா:
இது அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதனால் மும்பை அணியின் ரசிகர்களும் ரோகித் சர்மாவின் ரசிகர்களும் மும்பை அணி போட்டி நடைபெறும் மைதானங்களில் “ மும்பைக்கு ராஜா ரோகித் சர்மா” என முழங்கி வருகின்றனர். இது தொடர்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜா கூறிய கருத்து இணையத்தில் வைரலாகி வருகின்றது.
India ka Raja @ImRo45 💖🔥pic.twitter.com/Uy2yCDw0HI
— Hitman 🔥 Lover 🔥 (@ILoveYouJanu68) April 12, 2024
பெங்களூரு அணிக்கும் மும்பை அணிக்கும் இடையிலான போட்டிக்கும் முன்னதாக, மைதானத்தில் பேசிக்கொண்டு இருந்தார் அஜய் ஜடேஜா. அப்போது ரசிகர்கள் மும்பையின் ராஜா ரோகித் சர்மா என இந்தியில் முழக்கமிட்டனர். இதனைக் கேட்ட அஜய் ஜடேஜா ரோகித் மும்பையின் ராஜா அல்ல, அவர் இந்தியாவின் ராஜா எனக் கூறினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைராகி வருகின்றது.