Watch Video Ms Dhoni : ”என் ஃபேன்ஸுக்கு நான் தான் செய்வேன்”.. தோனி செய்த காரியம்.. வீடியோ வைரல்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்காக கேப்டன் தோனி செய்த காரியம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்காக கேப்டன் தோனி செய்த காரியம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பார்வையாளர்கள் அரங்கில் உள்ள நாற்காலிகளுக்கு தோனி வண்ணம் தீட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சிஎஸ்கே அணி பகிர்ந்த வீடியோ:
நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள சூழலில், ரசிகர்களிடையே அப்போட்டிகளை நேரில் காண்பதற்கான ஆர்வம் பன்மடங்கு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான தோனி பங்கேற்கும் கடைசி தொடர் இது என கூறப்படும் நிலையில், அவர் பங்கேற்கும் போட்டிகளை காண ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, பார்வையாளர் அரங்கில் உள்ள நாற்காலிகளுக்கு தோனி வண்ணம் தீட்டும் வீடியோவை சிஎஸ்கே அணி நிர்வாகம் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
“𝑫𝒆𝒇𝒊𝒏𝒊𝒕𝒆𝒍𝒚 𝒍𝒐𝒐𝒌𝒊𝒏𝒈 𝒀𝒆𝒍𝒍𝒐𝒗𝒆”
— Chennai Super Kings (@ChennaiIPL) March 27, 2023
Anbuden Awaiting for April 3🦁💛 pic.twitter.com/eKp2IzGHfm
”ரசிகர்களுக்காக காத்திருக்கிறோம்”
அந்த பதிவில் கண்டிப்பாக ரசிகர்களை எதிர்பார்க்கிறோம். ஏப்ரல் 3ம் தேதிக்காக காத்திருக்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, பார்வையாளர்களுக்கான நாற்காலிகளுக்கு தோனி மஞ்சள் நிற வண்ணம் தீட்டும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. அப்போது, இது வேலை செய்கிறதா என ஒருவர் கேள்வி எழுப்ப, “ இது வேலை செய்கிறது. நான் மறுபக்கத்தை காட்டுகிறேன் என கூறி, நாற்காலியின் பின்புறத்திலும் தோனி வண்ணம் தீட்டியுள்ளார். அதைதொடர்ந்து, மற்றொரு நீல நாற்காலிக்கு வண்ணம் தீட்டி, ”அடர் நிறம் பூசுவது எளிமையாக உள்ளது” எனவும் தோனி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
3 ஆண்டுகளுக்குப் பின் களமிறங்கும் தோனி:
ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெற்றது. சுமார் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் தோனி களமிறங்குவதால், டிக்கெட் விற்பனை களைகட்டியுள்ளது. ஆன்லைனில் தொடங்கிய டிக்கெட் விற்பனை வெறும் 20 நிமிடங்களில் முற்றிலுமாக நிறைவடைந்தது. மைதானத்தில் நேரடியாக விற்பனை செய்யப்படும் ரூ.1,500 டிக்கெட்டை வாங்க, நள்ளிரவு முதல் ரசிகர்கள் வரிசையில் காத்து இருந்தனர்.
சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள சிஎஸ்கே போட்டிகள்:
ஏப்ரல் 3 - எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரவு 07:30 மணி
ஏப்ரல் 12 - எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ், இரவு 07:30 மணி
ஏப்ரல் 21 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிராக, இரவு 07:30 மணி
ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ் எதிராக, மதியம் 03:30 மணி
மே 6 - மும்பை இந்தியன்ஸ் எதிராக, பிற்பகல் 03:30 மணி
மே 10 - எதிராக டெல்லி கேபிடல்ஸ், இரவு 07:30 மணி
மே 14 - எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இரவு 07:30 மணி