மேலும் அறிய

MS Dhoni: தலைக்கு தலை வணங்கிய ஜடேஜா... சிஎஸ்கேவுக்கு ரெய்னா வாழ்த்து... ரசிகர்கள் ஹேப்பி!

இந்த ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி. மும்பை அணியைப் பொறுத்தவரை, தொடர்ந்து ஏழாவது போட்டியில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. 

2022 ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. ஐ.பி.எல். தொடரில் சென்னை-மும்பை அணிகள் மோதும் ஆட்டம் என்றால் எப்போதும் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஃபீல்டிங் தேர்வு செய்தது. பேட்டிங் களமிறங்கிய மும்பை அணிக்கு, ரோஹித் ஷர்மா, இஷான் கிஷன் ஓப்பனிங் இறங்கினர். ஓப்பனர்கள் சொதப்ப, மற்ற பேட்டர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரை சதம் கடந்த திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால், 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 155 ரன்கள் எடுத்தது மும்பை அணி.

இலக்கை சேஸ் செய்த சென்னை அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட் சரிந்தது. பவர்ப்ளே முடிவதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சென்னை அணிக்கு, உத்தப்பா, ராயுடு ஆகியோர் ரன் சேர்த்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க, கடைசி வரை களத்தில் நின்றார் தோனி. கடைசி ஓவரில் 17 ரன்கள் தேவை என்றபோது நிதானமாக ஆடிய தோனி, ஒரு சிக்சர்,பவுண்டரி, 2 ரன்கள் மற்றும் மீண்டும் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 

இதனால், 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி போட்டியை வென்றது. இதன் மூலம், இந்த ஐபிஎல் தொடரில் தனது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது சென்னை அணி. மும்பை அணியைப் பொறுத்தவரை, தொடர்ந்து ஏழாவது போட்டியில் தோல்வியைத் தழுவி இருக்கிறது. 

இந்நிலையில், போட்டி முடிந்து வெற்றியுடன் பெவிலியன் திரும்பும்போது தோனியைப் பார்த்து ஜடேஜா ’Take a Bow' முறையில் உடலை வளைத்து மரியாதை செலுத்தினார். அதே போல, சென்னை அணிக்காக விளையாடிய ரெய்னா, தனது ட்விட்டர் பக்கத்தில் சென்னை அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார்.

அதில், “மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட சென்னை - மும்பை அணிகள் மோதிய போட்டி நடந்திருக்கிறது. கடைசியில், தோனி பாயின் இன்னிங்ஸ் மிக தேவையான ஒன்றாக இருந்திருக்கிறது. அதை பார்க்கவே அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றதற்கு சென்னை அணிக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டிருக்கிறார். மும்பை அணியை வென்றதற்காக சென்னை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Breaking News LIVE, June 5: விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளரை ஆதரியுங்கள் - முதல்வர் ஸ்டாலின் வீடியோவில் பரப்புரை
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
Kohli Rohit: விண்ணை பிளந்த முழக்கம் - கோப்பையுடன் கோலி & ரோகித் செய்த சம்பவம், ரசிகர்கள் குஷி - வைரல் வீடியோ
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
TNPL: கிரிக்கெட் ரசிகர்களே தயாரா? இன்று சேலத்தில் தொடங்கும் டிஎன்பிஎல் 8வது சீஸன்
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி -  உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
Rasipalan: கும்பத்துக்கு பக்தி, மீனத்துக்கு மகிழ்ச்சி - உங்கள் ராசிக்கு என்ன பலன் தெரியுமா?
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
பக்தியோட சென்ற சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. முதல்வருக்கு பறந்த புகார்! சிக்கிய பாதிரியார்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Team India: இந்திய அணிக்கு 125 கோடி ரூபாயை பரிசாக வழங்கிய பிசிசிஐ.. குதூகலத்தில் வீரர்கள்!
Embed widget