MI Vs LSG,IPL 2022 LIVE: 8 போட்டிகளில் 8 தோல்வி.. தொடரும் மும்பையின் வேதனை..லக்னோ அசத்தல் வெற்றி !
MI Vs LSG,IPL 2022 LIVE: மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் போட்டியின் உடனுக்குடன் தகவல்கள்.. !
LIVE
Background
ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்யும் அளவிற்கு போட்டிகள் நெருங்கிவிட்டன. இதனால், ஒவ்வொரு அணியும் தங்களது அடுத்தடுத்த போட்டிகளில் வென்று ப்ளே ஆப் சுற்றை உறுதி செய்ய காத்திருக்கின்றன.
இந்த நிலையில், மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடக்கும் 37-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன. 5 முறை ஐ.பி.எல். சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணிக்கு இந்த தொடர் மறக்கப்பட வேண்டிய தொடராக அமைந்துள்ளது. 7 போட்டிகளில் ஆடி 7 போட்டிகளிலும் தோல்வியடைந்து முதல் அணியாக தொடரை விட்டு வெளியேறியுள்ளது.
அதேசமயம் புதிய அணியாக ஐ.பி.எல். தொடரில் அடியெடுத்து வைத்துள்ள லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி சிறப்பாக ஆடி வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்று தனது ப்ளே ஆப் சுற்று வாய்ப்பை பிரகாசப்படுத்திக்கொள்ள லக்னோ முயற்சிக்கும். லக்னோ அணியை பொறுத்தவரை அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் அசத்தலான பார்மில் உள்ளார். குயின்டின் டி காக், மணீஷ் பாண்டே அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்தினால் அவர்களது ஸ்கோர் எகிறும். தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி மிடில் வரிசையில் அசத்த காத்துள்ளனர்.
MI Vs LSG,IPL 2022 LIVE: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை தோல்வி !
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்துள்ளது.
MI Vs LSG,IPL 2022 LIVE: 18 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 126/5
18 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்துள்ளது.
MI Vs LSG,IPL 2022 LIVE: 15 ஓவர்களில் மும்பை 98/4
15 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 98 ரன்கள் எடுத்துள்ளது.
MI Vs LSG,IPL 2022 LIVE: 14 ஓவர்களின் முடிவில் மும்பை 93/4
14 ஓவர்களின் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் எடுத்துள்ளது.
MI Vs LSG,IPL 2022 LIVE: 12 ஓவர்களின் முடிவில் மும்பை 72/4
12 ஓவர்களின் முடிவில் மும்பை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்துள்ளது.