MI vs KKR, IPL 2023 LIVE: கொல்கத்தாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை..!
IPL 2023, Match 22, MI vs KKR: மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி குறித்த லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.
LIVE
Background
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியின் போது 'women in sports' என்ற கோட்பாட்டை முன்வைக்கும் வகையில் தனித்துவமான முயற்சிகளை மேற்கொள்ள உள்ளது.
விளையாட்டில் பெண்கள்
36 தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 19,000க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் மற்றும் 200 ஸ்பெஷல் சைல்டு-களின் ஆரவாரத்துடன் இந்த போட்டி நடைபெற உள்ளது. மேலும் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள், மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணி ஜெர்சியை அணிந்து ஆட உள்ளனர். இந்த நிகழ்வானது, ரிலையன்ஸ் அறக்கட்டளை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள, அனைவருக்கும் கல்வி மற்றும் விளையாட்டு (ESA) முன்முயற்சியின் ஒரு பகுதியாகும். இதற்காக நகரம் முழுவதிலும் உள்ள NGO களில் இருந்து குழந்தைகளை நேரடியாக விளையாட்டைக் காண அழைக்கப்பட்டுள்ளனர்.
பெருமிதம் கொள்ளும் நீதா அம்பானி
MI vs KKR போட்டியானது ESA முன்முயற்சியின் ஒரு பகுதியாக பெண் குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில் நடத்தப்படவுள்ளது. இந்த முயற்சி குறித்து பேசிய நீதா அம்பானி, "இந்த சிறப்பு போட்டியானது விளையாட்டுகளில் பெண்களின் ஈடுபாட்டை கொண்டாடும் விதமாக இருக்கும். இந்த ஆண்டு முதல் பெண்கள் பிரீமியர் லீக் மூலம் இந்தியாவின் மகளிர் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு முக்கிய தொடக்கம் கிடைத்தது. பெண்களின் கல்வி மற்றும் விளையாட்டுக்கான உரிமையை வெளிச்சம் போட்டுக் காட்டும் வகையில், இந்த ஆண்டுக்கான ESA நிகழ்வை பெண் குழந்தைகளுக்காக அர்ப்பணிக்கிறோம்!", என்றார்.
WPL ஜெர்சியில் மும்பை அணி
ரிலையன்ஸ் அறக்கட்டளை இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்டேடியத்தில் ஐபிஎல் போட்டியை நேரலையில் ரசிக்க பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சேர்ந்த 19,000 இளம் பெண்களை வரவழைப்பதில் பெருமிதம் கொள்கிறது என்று மேலும் கூறினார். இது மட்டுமின்றி இன்றைய போட்டியில் விளையாடும் மும்பை அணி வீரர்கள் WPL தொடரில் மும்பை அணி வீராங்கனைகளின் ஜெர்சியை அணிந்து விளையாடுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. அந்த ஜெர்சியுடன் மும்பை அணியின் திலக் வர்மா நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டு மும்பை அணி அதிகாரப்பூர்வமாக இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.
🤩 𝗦𝗣𝗘𝗖𝗜𝗔𝗟 𝗝𝗘𝗥𝗦𝗘𝗬 𝗙𝗢𝗥 #𝗘𝗦𝗔𝗗𝗮𝘆 🤩
— Mumbai Indians (@mipaltan) April 15, 2023
Our boys will be donning the #WPL MI jersey tomorrow to inspire the girl child and we are all 🥹🥹 right now. 💙#OneFamily #MumbaiMeriJaan #MumbaiIndians #TATAIPL #IPL2023 @TilakV9 pic.twitter.com/NI0A9NqKOx
பிரம்மாண்ட ஏற்பாடு
பழம்பெரும் முன்னாள் இந்திய பேட்டர் சச்சின் டெண்டுல்கர், தொடக்கத்திலிருந்தே ESA பயணத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இந்த முயற்சியானது கல்வி மற்றும் விளையாட்டு அனுபவங்களை எந்த வகையான குடும்பப் பின்னணியில் இருந்தாலும் எல்லா குழந்தைகளுக்கும் அணுகக்கூடிய வகையில் உத்வேகம் மற்றும் வாய்ப்புகளை வழங்க முயல்கிறது. இந்த 19,000 பேரை ஏற்றிச் செல்ல 2000க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுடன் மொத்தம் 500 தனியார் பேருந்துகள் பயன்படுத்தப்படும்.
1,00,000 உணவுப் பெட்டிகள் மற்றும் போதுமான தண்ணீர் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகள் சிறப்பு பதிப்பான ESA டி-ஷர்ட்களையும் பெறுவார்கள். மேலும் அவர்களுக்கு வான்கடே கான்கோர்ஸில் வரிசையாக இருக்கும் நடவடிக்கைகளில் பங்கேற்கும் வாய்ப்பும், விளையாட்டின் போது அவர்கள் அவர்களே உருவாக்கும் வாசகம் எழுதிய போர்டையும் காண்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.
MI vs KKR Live Score: 17 ஓவர்கள் முடிவில்..!
வெற்றி இலக்கை நெருங்கி வரும் மும்பை அணி 17 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 180 ரன்கள் சேர்த்துள்ளது.
MI vs KKR Live Score: சிறப்பான ஓவர்..!
கொல்கத்தாவின் ஷ்யாஸ் வீசிய 14வது ஓவரில் ஒரு ரன் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். இந்த ஓவர் முடிவில் 148 - 3.
MI vs KKR Live Score: விக்கெட்..!
கொல்கத்தா அணியின் சுயாஷ் சர்மா திலக் வர்மாவை தனது பந்து வீச்சில் க்ளீன் போல்ட் ஆகி வெளியேறினார். திலக் வர்மா 25 பந்தில் 30 ரன்கள் சேர்த்தார்.
MI vs KKR Live Score: சூர்யகுமார் யாதவ் ருத்ரதாண்டவம்..!
அதிரடியாக ஆடி வரும் சூர்ய குமார் யாதவ் 20 பந்தில் 37 ரன்கள் குவித்துள்ளார். 13 ஓவர்கள் முடிவில் அந்த அணி இரண்டு விக்கெட்டை இழந்து 147 ரன்கள் சேர்த்துள்ளது.
MI vs KKR Live Score: பார்ட்னர்ஷிப்..!
திலக் வர்மா மற்றும் சூர்யகுமார் யாதவ் பார்ட்னர்ஷில் மும்பை அணி சிறப்பாக ரன்கள் சேர்த்து வருகிறது. 12 ஓவர் முடிவில் 130 - 2 .