MI vs CSK IPL 2023: முதல் வெற்றியை முத்தமிடுமா மும்பை..? வான்கடேவில் சாகசம் செய்யுமா சென்னை..? வெற்றி யாருக்கு?
வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள மேற்பரப்பு இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக இருக்கும் என்று அறியப்படுகிறது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை சந்தித்தது. இதையடுத்து, மும்பை அணி இன்று தனது இரண்டாவது போட்டியில் சென்னை சூப்பர் கின்ஸ் அணியை சந்திக்கிறது.
எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 6வது இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் புள்ளிபட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறும். அதே நேரத்தில் தனது முதல் போட்டியில் தோல்வியடைந்ததால் எப்படியாவது இந்த போட்டியில் வெற்றிபெற வேண்டும் என்று மும்பை இந்தியன்ஸ் அணி கடுமையாக முயற்சிக்கும்.
ஐபிஎல் தொடரில் யார் யார் மோதினாலும், இவ்வளவு எதிர்பார்ப்பு இருக்காது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போட்டி போன்றது சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான போட்டி. அதனால் அனைவரும் கண்களும் இந்த போட்டியின் மீது இருக்கும். இந்த போட்டியானது (இன்று) ஏப்ரல் 8ம் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டெடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
MI vs CSK போட்டி விவரங்கள்:
- மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், போட்டி 12, ஐபிஎல் 2023
- இடம்: வான்கடே ஸ்டேடியம், மும்பை
- தேதி & நேரம்: சனிக்கிழமை, ஏப்ரல் 8, மாலை 7:30 மணி
- டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா
MI vs CSK பிட்ச் அறிக்கை:
வான்கடே ஸ்டேடியத்தில் உள்ள மேற்பரப்பு இன்றைய போட்டியில் பேட்ஸ்மேன்களுக்கு சாதமாக இருக்கும் என்று அறியப்படுகிறது. இரு அணிகளும் ஆபத்தான பேட்டிங் வரிசையைக் கொண்டிருப்பதால் அதிக ஸ்கோரைப் பெறும் போட்டியாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிட்ஸ் தட்டையாகவும் கடினமாகவும் உள்ளதால் பேட்ஸ்மேன்கள் வேகமாக ரன்களை குவிக்க வாய்ப்பு அதிகம். எனவே, போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் முதலில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது.
MI vs CSK கணிக்கப்பட்ட வெலவன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் (MI):
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, ஜோஃப்ரா ஆர்ச்சர், அர்ஷத் கான்
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK):
டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், ஆர்எஸ் ஹங்கர்கேகர்
சிறந்த பேட்ஸ்மேன்- ருதுராஜ் கெய்க்வாட்
கடந்த இரண்டு போட்டிகளில் சென்னை அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அபாரமாக விளையாடி வருகிறார். தற்போது இந்த சீசனில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடம் பிடித்து ஆரஞ்சு கோப்பை தனதாக்கியுள்ளார். களமிறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் ருதுராஜ், பந்துவீச்சாளருக்கு பங்கம் விளைவிக்குகிறார். மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இவர் அதிரடியை வெளிப்படுத்தினால் சென்னை அணி நிச்சயம் வெல்லும்.
சிறந்த பந்து வீச்சாளர் - ஜோஃப்ரா ஆர்ச்சர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான மும்பை அணியின் பந்துவீச்சாளர் ஆர்ச்சர் மட்டுமே சிறப்பாக பந்துவீசினார். மற்றவர்களில் பந்துவீச்சு சொல்லும்படியாக இல்லை. ஆர்ச்சர் 4 ஓவர்கள் வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்தார். இருப்பினும் வரவிருக்கும் போட்டிகளில் ஆர்ச்சர் தன்னை யார் என்று நிரூபித்தால் எதிரணி வேகத்தில் வீழ்வது நிச்சயம்.
இன்றைய வெற்றியாளர் கணிப்பு : சென்னை சூப்பர் கிங்ஸ்