LSG vs GT: டாஸ் வென்ற லக்னோ..பேட்டிங் தேர்வு..பந்து வீச்சில் ஜொலிக்குமா குஜராத்?
டாஸ் வென்ற லக்னோ அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
![LSG vs GT: டாஸ் வென்ற லக்னோ..பேட்டிங் தேர்வு..பந்து வீச்சில் ஜொலிக்குமா குஜராத்? Lucknow Super Giants won the toss decided to bat first against GT LSG vs GT: டாஸ் வென்ற லக்னோ..பேட்டிங் தேர்வு..பந்து வீச்சில் ஜொலிக்குமா குஜராத்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/07/6399e0af868cc81b5f9e4a6a06eaec401712496972191572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐ.பி.எல் சீசனில் 21 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
குஜராத் டைட்டன்ஸ் அணியைப் பொறுத்தவரையில் நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் சந்தித்துள்ளது. இதனால் நான்கு புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. அதேபோல் லக்னோ அணி மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டில் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் லக்னோ அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது. லக்னோ அணியின் பலமாக தற்போது பார்க்கப்படுவது பந்து வீச்சுதான். கடந்த இரண்டு போட்டிகளிலும் லக்னோ அணி சிறப்பாக பந்து வீசி வெற்றியைத் தன்வசப்படுத்தியுள்ளது. குஜராத் அணியைப் பொறுத்தவரையில் புதிய கேப்டன் சுப்மன் கில் எடுக்கும் முடிவுகளால் போட்டியை வென்ற வரலாறும் உள்ளது, அதேநேரத்தில் தோல்வியைச் சந்தித்த வரலாறும் உள்ளது.
டாஸ் வென்ற லக்னோ:
டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. அந்தவகையில் குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச்சில் ஜொலிக்குமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் டைட்டன்ஸ் (பிளேயிங் லெவன்):
சுப்மான் கில்(கேப்டன்), ஷரத் பிஆர்(விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், நூர் அகமது, உமேஷ் யாதவ், ஸ்பென்சர் ஜான்சன், தர்ஷன் நல்கண்டே, மோகித் சர்மா
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (பிளேயிங் லெவன்):
குயின்டன் டி காக், கே.எல். ராகுல்(கேப்டன் ), தேவ்தத் பாடிக்கல், மார்கஸ் ஸ்டோனிஸ், நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, ரவி பிஷ்னோய், யாஷ் தாக்கூர், நவீன்-உல்-ஹக், மயங்க் யாதவ்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)