மேலும் அறிய

LSG vs RCB IPL 2023: வெற்றியை கைப்பற்றுமா பெங்களூரு..? தாக்கத்தை தருமா லக்னோ..? இன்று யாருக்கு வெற்றி..? ஒரு பார்வை!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

LSG vs RCB Match Prediction: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான மோசமான தோல்விக்கு பிறகு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரின் இந்த 15வது போட்டியானது பெங்களூருவின் சொந்த மைதானமான  சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

இந்த சீசனில் லக்னோ அணியை பொறுத்தவரை மூன்று போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், பாப் டு பிளிசி தலைமையிலான பெங்களூர் அணி இரண்டு போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் இருக்கிறது. இதையடுத்து, இந்த போட்டியில் எப்படியாவது இரண்டாவது வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கில் பெங்களூரு அணி களமிறங்கும். 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

இந்த ஐபிஎல் தொடரில் 139 ரன்கள் எடுத்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக கைல் மேயர்ஸ் அதிக ரன் குவித்துள்ளார். இவரது பேட்டில் இருந்து 9 சிக்ஸர்கள் மற்றும் 12 பவுண்டரிகள் பறந்துள்ளது. அதேபோல், நிக்கோலஸ் பூரன் 175 ஸ்டிரைக் ரேட்டில் 79 ரன்கள் எடுத்துள்ளார்.

பந்துவீச்சை பொறுத்தவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக மார்க் வுட், 8 விக்கெட்களை வீழ்த்தி பர்பிள் கேப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் அதிகபட்சமாக விராட் கோலி,  5 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகள் விளாசி 103 ரன்கள் குவித்துள்ளார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக கர்ண் ஷர்மா சிறந்த பந்துவீச்சாளராக இருந்து 4 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், போட்டி 15, ஐபிஎல் 2023

  • இடம்: எம் சின்னசாமி ஸ்டேடியம், பெங்களூரு
  • தேதி & நேரம்: திங்கள், ஏப்ரல் 10, மாலை 7:30 மணி
  • டெலிகாஸ்ட் & ஸ்ட்ரீமிங் விவரங்கள்: ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் மற்றும் ஜியோசினிமா

RCB vs LSG பிட்ச் அறிக்கை:

பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியம் பெரும்பாலும் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும் மைதானமாகவே இருக்கும். சிறிய மைதானம் என்பதால், அதிக ரன்கள் அடிக்கும் போட்டியை நிச்சயம் எதிர்பார்க்கலாம். 180 ரன்களுக்கு மேல் இந்த மைதானத்தில் நல்ல ஸ்கோராக இருக்கும், டாஸ் வென்ற கேப்டன் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்ய வேண்டும்.

கணிப்பு:

சிறந்த பேட்ஸ்மேன் - விராட் கோலி

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் விராட் கோலி சிறப்பாக விளையாடி 82 ரன்கள் குவித்தார். ஆனால், கொல்கத்தா அணிக்கு எதிராக குறைந்த ரன்களில் வெளியேறினார். இன்றைய போட்டியில் விராட் கோலி பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினால் நிச்சயம் லக்னோ அணி அடி வாங்கும். 

சிறந்த பந்துவீச்சாளர் - மார்க் வூட்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் லக்னோ அணிக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.  இதுவரை 8 விக்கெட்கள் வீழ்த்தில் பர்பிள் கேப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். 

இன்றைய போட்டி கணிப்பு : சேஸிங் பெறும் அணியே வெற்றிபெறும். 

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் முழு அணி விவரம்:

கேஎல் ராகுல் (கேப்டன்), ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மனன் வோஹ்ரா, குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், கிருஷ்ணப்பா கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், க்ருனால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வுட், மயங்க் யாதவ் , ரவி பிஷ்னோய், நிக்கோலஸ் பூரன், ஜெய்தேவ் உனட்கட், யாஷ் தாக்கூர், ரொமாரியோ ஷெப்பர்ட், டேனியல் சாம்ஸ், அமித் மிஸ்ரா, பிரேராக் மன்கட், ஸ்வப்னில் சிங், நவீன்-உல்-ஹக், யுத்வீர் சரக்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் முழு அணி விவரம்:

ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்சல் படேல், டேவிட் வில்லி, கர்ன் ஷர்மா, மஹிபால், மஹிபால், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, ஹிமான்ஷு சர்மா, மைக்கேல் பிரேஸ்வெல், மனோஜ் பந்தேஜ், ராஜன் குமார், அவினாஷ் சிங், ஆர் சோனு யாதவ்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget