LSG vs RCB: பெங்களூர் அணிக்கு மைதானத்திற்கு வந்து ஆதரவளித்த "அதிரா" சஞ்சய்தத்..!
லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூர் அணிக்கு கே.ஜி.எப். 2-ல் நடித்திருந்த பிரபல நடிகர் சஞ்சய் தத் மற்றும் ரவீனா டான்டன் மைதானத்திற்கு சென்று நேரில் ஆதரவு அளித்தனர்.
15வது ஐ.பி.எல். தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 31வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றர். இந்த தொடர் தொடங்கியது முதல் லக்னோ அணியும், பெங்களூர் அணியும் சம பலத்துடன் இருப்பதால் இந்த போட்டியில் வெற்றி பெறப்போவது யார்? என்று ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி கே.ஜி.எப். 2 படத்தில் அதிரா கதாபாத்திரத்தில் நடித்த பிரபல இந்தி நடிகர் சஞ்சய் தத்தும், ரமீகாசென் கதாபாத்திரத்தில் நடித்த ரவீணாடாண்டனும் பெங்களூர் அணிக்கு நேரில் சென்று ஆதரவு அளித்தனர். ஏற்கனவே அவர்கள் வர இருப்பதாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி அறிவித்திருந்தது.
We’ve got some special guests supporting RCB tonight! 🤩🙌🏻@hombalefilms @duttsanjay @TandonRaveena #PlayBold #WeAreChallengers #IPL2022 #Mission2022 #RCB #ನಮ್ಮRCB #LSGvRCB pic.twitter.com/ZIGZUB91Ez
— Royal Challengers Bangalore (@RCBTweets) April 19, 2022
கே.ஜி.எப். படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கே.ஜி.எப். 2ம் பாகம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி வெளியானது. இந்த படத்திற்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பால் இந்தியா மட்டுமின்றி வெளியான அனைத்து மொழிகளிலும் கே.ஜி.எப். வசூலை வாரிக்குவித்து வருகிறது. கன்னட மொழியில் உருவாகிய கே.ஜி.எப். தமிழ் தெலுங்கு, இந்தி, மலையாளம் என்று அனைத்து மொழிகளிலும் இந்தியாவில் வெற்றிக்கொடிகட்டி வருகிறது.
இதன் காரணமாக பெங்களூர் பெயரில் ஆடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு ஆதரவு அளிப்பதற்காக அந்த படத்தில் வில்லன் கதாபாத்திரமான அதிரா கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சய் தத்தும், பிரதமர் ரமீகாசென் கதாபாத்திரத்தில் பிரமாதமான நடிப்பை வெளிப்படுத்திய ரவீனா டான்டனும் நேரில் நேரில் ஆதரவு அளிக்க உள்ளனர். இது பெங்களூர் அணியினர் மட்டுமின்றி கே.ஜி.எப். ரசிகர்கள் இடையேயும் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்