LSG vs GT, IPL 2023: ஹர்திக் படையிடம் அடுத்தடுத்த அடிவாங்கிய ராகுல் படை..! குஜராத்தை பழிவாங்குமா லக்னோ..? இதுவரை நேருக்கு நேர்..!
ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இடையேயான போட்டிகள் மற்றும் அதன் முடிவுகள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் இடையேயான போட்டிகள் மற்றும் அதன் முடிவுகள் தொடர்பான விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
லக்னோ - குஜராத் மோதல்:
வார இறுதியான இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்படி, ல்கனோவில் உள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாயி மைதானத்தில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் கே.எல். ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன. இந்திய நேரப்படி மாலை 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டுகளிக்கலாம். முன்னதாக இந்த அணிகள் ஏற்கனவே மோதியுள்ள போட்டிகளின் முடிவை சற்றி விரிவாக பார்க்கலாம்.
நேருக்கு நேர்:
ஐபிஎல் தொடரில் கடந்தாண்டு தான் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் அறிமுகமாகின. இதனால் இதுவரை இரண்டு முறை மட்டுமே நேருக்கு நேர் மோதியுள்ளன. அந்த இரண்டிலுமே குஜராத் அணி வெற்றி பெற்றுள்ளது. லக்னோ மைதானத்தில் இந்த இரு அணிகளும் மோதுவது இதுவே முதல்முறையாகும். உள்ளூர் மைதானத்தில் இதுவரை 3 போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள லக்னோ அணி, அதில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது.
ஸ்கோர் விவரங்கள்:
குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 158
லக்னோ அணிக்கு எதிராக குஜராத் அணியின் அதிகபட்ச ஸ்கோர்: 161
குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 82
லக்னோ அணிக்கு எதிராக குஜராத் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர்: 161
தனிநபர் சாதனைகள்:
லக்னோ அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் - தீபக் ஹூடா, 82 ரன்கள்
குஜராத் அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரர் - சுப்மன் கில், 63 ரன்கள்
லக்னோ அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் - ஆவேஷ் கான், 3 விக்கெட்கள்
குஜராத் அணிக்காக அதிக விக்கெட் எடுத்த வீரர் - ரஷித் கான்,5 விக்கெட்கள்
லக்னோ அணிக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் - டி காக், 2 கேட்ச்கள்
குஜராத் அணிக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் - சாஹா,2 கேட்ச்கள்
நடப்பு தொடரில் இதுவவரை:
நடப்பு தொடரில் லக்னோ அணி இதுவரை 6 போட்டிகளில் 4 வெற்றிகளுடன், 8 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. குஜராத் அணியோ 5 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளை பெற்று, 6 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இன்றை போட்டியில் வென்று புள்ளிப்பட்டியலில் முன்னேற இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகின்றன.