![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
KKR vs RCB, IPL 2023 LIVE: நரைன் - சக்ரவர்த்தி- சுயாஷ் சுழலில் சம்பவம்.. பெங்களூரு அணி படுதோல்வி
KKR vs RCB, IPL 2023 LIVE Score: நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று நடக்கும் லீக் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
LIVE
![KKR vs RCB, IPL 2023 LIVE: நரைன் - சக்ரவர்த்தி- சுயாஷ் சுழலில் சம்பவம்.. பெங்களூரு அணி படுதோல்வி KKR vs RCB, IPL 2023 LIVE: நரைன் - சக்ரவர்த்தி- சுயாஷ் சுழலில் சம்பவம்.. பெங்களூரு அணி படுதோல்வி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/06/6c8525c920149486a06f895c34a625041680782398504265_original.jpg)
Background
KKR vs RCB, IPL 2023 LIVE Score
நடப்பு ஐபிஎல் சீசனில் இன்று நடக்கும் லீக் போட்டியில் கொல்கத்தா - பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
16வது ஐபிஎல் சீசன்:
நடப்பாண்டுக்கான ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் மாதம் 31 ஆம் தேதி குஜராத் அஹமதாபாத் மைதானத்தில் கோலகலமாக தொடங்கியது. 3 ஆண்டுகளுக்குப் பின் தங்கள் அணி உள்ளூர் மைதானத்தில் விளையாடி வருவதால் ரசிகர்களும் ஆர்வமுடன் ஐபிஎல் போட்டிகளை கண்டுகளித்து வருகின்றனர். கடந்தாண்டைப் போல இந்த சீசனிலும் சென்னை, டெல்லி, மும்பை,கொல்கத்தா, பஞ்சாப், ராஜஸ்தான்,குஜராத், லக்னோ, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன.
இதுவரை 8 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில்,ஏறக்குறைய அனைத்து அணிகளும் தங்கள் முதல் போட்டியில் விளையாடி விட்டன. இன்று நடக்கும் 9வது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது.இந்த ஆட்டமானது கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த ஐபிஎல் சீசனில் இதுவரை
கடந்த சீசனில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையில் கொல்கத்தா அணி விளையாடியது. ஆனால் முதுகுப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் இந்த சீசனில் இருந்து விலகியதால் நிதிஷ் ராணா அணியை வழி நடத்தி வருகிறார். அவரது தலைமையிலான அணி தனது முதல் ஆட்டத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் பஞ்சாப் அணியிடம் 7 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
அதேசமயம் ஃபாஃப் டூப்ளெசிஸ் தலைமையிலான பெங்களூரு அணி தனது முதல் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இரு அணிகளும் இதுவரை 30 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா அணி 16 ஆட்டங்களிலும், பெங்களூரு அணி 14 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.
மைதானம் எப்படி?
பேட்ஸ்மேன்களின் சொர்க்கமாக திகழும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இதுவரை 78 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் 47 ஆட்டங்களில் இரண்டாவது பேட்டிங் செய்த அணிகள் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல் இம்மைதானத்தில் அதிகப்பட்ச ரன்னை கொல்கத்தா அணியும் (232 ரன்கள்), குறைந்தப்பட்ச ரன்களை (49 ரன்கள்) பெங்களூர் அணியும் பதிவு செய்துள்ள்ளது. கொல்கத்தா அணி இந்த மைதானத்தில் 74 ஆட்டங்களில் 45 வெற்றி மற்றும் 29 ஆட்டங்களில் தோல்வியடைந்துள்ளது. அதேபோல் பெங்களூரு அணி 11 ஆட்டங்களில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது.
அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்)
கொல்கத்தா: ரஹ்மானுல்லா குர்பாஸ், மன்தீப் சிங், நிதிஷ் ராணா, ரின்கு சிங், ஆண்ட்ரூ ரஸல், ஷர்துல் தாக்கூர், சுனில் நரைன், டிம் சவுத்தி, அனுகுல் ராய், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி
பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), கிளென் மேக்ஸ்வெல், மைக்கேல் பிரேஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், கரண் ஷர்மா, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், ரீஸ் டாப்லி, முகமது சிராஜ்
தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் வீரர் (impact Player) யார்?
கொல்கத்தா அணியில் அனுகுல் ராய், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, குல்வந்த் கெஜ்ரோய்யா, வெங்கடேஷ் ஐயர் போன்றவர்களில் ஒருவர் மீண்டும் இம்பாக்ட் பிளேயராக இடம் பெறலாம். பெங்களூரு அணியில் சுயாஷ் பிரபுதேசாய், அனுஜ் ராவத், மஹிபால் லோம்ரோர், சோனு யாதவ் மற்றும் ஃபின் ஆலன் ஆகியோரில் ஒருவர் இம்பேக்ட் பிளேயராக களமிறக்கப்படலாம்.
123 ரன்களுக்கு பெங்களூரு ஆல்-அவுட்
17.4 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 123 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் கொல்கத்தா அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
9வது விக்கெட்டை இழந்த பெங்களூரூ
9வது விக்கெட்டாக கரண் சர்மா ஆட்டமிழந்தார்.
கடைசி நம்பிக்கையையும் இழந்த பெங்களூரு..
பெங்களூரு அணியின் கடைசி நம்பிக்கையாக இருந்த தினேஷ் கார்த்திக், 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.
7வது விக்கெட்டை இழந்த பெங்களூரு
பெங்களூரு அணியின் அனுஜ் ராவத் ஒரு ரன் மட்டுமே எடுத்து கேட்ச் முறையில் அவுட்டானார்.
பிரேஸ்வெல்லும் அவுட்...
பேட்டிங்கில் அசத்திய ஷர்தூல் தாக்கூர் வீசிய ஓவரின் முதல் ஓவரிலேயே, பிரேஸ்வெல்லும் கேட்ச் முறையில் அவுட்டானார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)